Ather 450x – ஏதெர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்க 5 ஆண்டு கடன் திட்டம்

E2W வராலாற்றில் முதன்முறையாக ஏதெர் எனர்ஜி நிறுவனம் 5 ஆண்டுகளுக்கான EMI திட்டத்தை கொண்டு வந்து வாடிக்கையாளர்கள் இலகுவாக மின்சார ஸ்கூட்டரை தேர்ந்தெடுக்க வாய்ப்பினை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் FAME-II மானியம் குறைக்கப்பட்டதை தொடர்ந்து எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களின் உயர்ந்துள்ளது.

ஏதெர் எனர்ஜி நிறுவனம் 450X  எலக்ட்ரிக் மாடலை ரூ. 1,46,664 மற்றும் புரோ பேக் பெற்ற வேரியண்ட் ரூ. 1,67,178 ஆக உள்ளது. கூடுதலாக புதிய 450s மாடலை ரூ.1,29,999 விலையில் அறிவித்துள்ளது.

Ather 450X EMI plans

இருசக்கர வாகனங்களுக்கு பொதுவாக இந்திய வங்கிகள் மற்றும் NBFC (வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள்) சிறப்பு சூழ்நிலைகளில் 36 மாதங்கள் மற்றும் 48 மாதங்களுக்கும் மேலாக கடன் காலத்தை நீட்டிக்கப்படுவதில்லை. ஆனால் முதன்முறையாக 60 மாதங்கள் அல்லது 5 ஆண்டுகள் வரை பேட்டரி மின்சார வாகனத்திற்கு என மாற்றியமைத்துள்ளது.

ஏதெர் எனர்ஜி நிறுவனம் IDFC First, Bajaj Finance மற்றும் Hero FinCorp என மூன்று நிதி நிறுவனங்களுடன் இணைந்து 60 மாத தவனை திட்டத்தில் மின்சார இரு சக்கர வாகனக் கடனை வழங்க உள்ளது. மேலும், இந்த முயற்சியை வலுப்படுத்த மற்ற நிதி நிறுவனங்களும் வங்கிகளும் இணைய வாய்ப்புள்ளது.

ஏதெர் வழங்கும் புதிய ஐந்தாண்டு வாகனக் கடனின் கீழ் கடனை மாதாந்திர திருப்பிச் செலுத்துதல் அல்லது EMI கட்டணம் ரூ. 2,999 ஆக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Loan Plan

Specifics IDFC Bajaj Finance
Scheme Type/Name UnZip 100% LTV
ROI 8.99% 8.99%-9.99%
Tenure (months) 12 to 60 12 to 60
Max Loan Amount 100% 100%
Processing Fee 2.00% 2.00%
Advance EMI
Other Charges Rs 1,331 Rs 1,100
Stamp Duty As per Actuals As per Actuals
Maximum Dealer Payout 1% 1%
Accessories Upto Rs 5,000 Rs 4,000 or 6% of ex-showroom

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.