பெர்ஃபாமென்ஸ் ரக பிஎம்டபிள்யூ M2 கார் இந்திய சந்தையில் முழுமையாக இறக்குமதி செய்யப்பட்ட காராக விற்பனைக்கு ரூ.98 லட்சத்தில் விற்பனைக்கு வெளியாகியுள்ளது. குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும் கிடைக்கலாம்.
மிக சிறப்பான பெர்ஃபாம்ன்ஸை வெளிப்படுத்துகின்ற எம்2 காரின் அதிகபட்ச வேகம் 250kph ஆக வரையறுக்கப்பட்டுள்ளது.
2023 BMW M2
புதிய பிஎம்டபிள்யூ M2 காரில் 3.0 லிட்டர் ட்வின்பவர் டர்போ இன்-லைன் 6-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் 6250rpm-ல் 460 hp மற்றும் 2650-5870 rpm-ல் 550 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் மற்றும் 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் விருப்பத்தையும் வழங்குகிறது.
ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மூலம் 4.1 வினாடிகளிலும், மேனுவல் கியர்பாக்ஸ் மூலம் 4.3 வினாடிகளிலும் 0-100 கிமீ வேகத்தை எட்ட முடியும்.
ஆட்டோமேட்டிக் எம்2 மைலேஜ் 10.13 கிமீ/லி மற்றும் மேனுவல் டிரான்ஸ்மிஷனில் 9.78 கிமீ/லி வழங்குகிறது.
M2 மாடலில் கம்ஃபோர்ட் அமைப்பு, மெமரி திறன் பெற்ற இருக்கைகள், M சீட் பெல்ட்கள், ஹைபீம் உதவியுடன் கூடிய அடாப்டிவ் எல்இடி ஹெட்லேம்ப், ஹர்மன் கார்டன் சவுண்ட் சிஸ்டம், பிஎம்டபிள்யூ கனெக்ட்டிவிட்டி தொகுப்பு, வயர்லெஸ் சார்ஜிங், 19-இன்ச் அலாய் வீல்க மற்றும் பின்புறத்தில் 20-இன்ச் அலாய் வீல் உள்ளது.