வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பெல்கிரேட்: ”செர்பியா அதிபர் அலெக்ஸாண்டர் வுசி உடனான பேச்சு, மிகவும்ஆக்கப்பூர்வமான சந்திப்பாக அமைந்தது,” என, ஜனாதிபதி திரவுபதி முர்மு தெரிவித்தார்.
தென்கிழக்கு மற்றும் மத்திய ஐரோப்பாவில், பால்கன்ஸ் தீபகற்பத்தில் அமைந்துள்ள செர்பியாவுக்கு நம் ஜனாதிபதிதிரவுபதி முர்மு அரசு முறை பயணமாக சென்றுள்ளார். அந்நாட்டுக்கு பயணம் மேற்கொள்ளும் முதல் இந்திய ஜனாதிபதி என்ற பெருமையை முர்முபெறுகிறார்.
செர்பியா அதிபர் அலெக்ஸாண்டர் வுசியை நேற்று சந்தித்து உரையாடிய பின், ஜனாதிபதி முர்மு வெளியிட்ட அறிக்கை: இந்தியா – செர்பியா உறவின் முக்கிய அம்சங்கள், இருதரப்பு நலன் சார்ந்த பொதுவான உலகளாவிய மற்றும் பிராந்திய பிரச்னைகள் குறித்து அதிபர் அலெக்ஸாண்டர் வுசி உடன் பேசினேன். இந்த சந்திப்பு ஆக்கபூர்வமான பயனுள்ள சந்திப்பாக அமைந்தது.
இரு நாட்டுக்கும் இடையிலான நீண்டகால உறவை, வர்த்தகம், முதலீடு, அறிவியல், தொழில்நுட்பம், தகவல் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்ப துறைகளில் வளர்க்கவும், இரு நாட்டு மக்கள்இடையிலான தொடர்புகளை மேம்படுத்துவது குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது. இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே,செர்பியாவில் வசிக்கும் இந்தியர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில், ஜனாதிபதி திரவுபதி முர்முநேற்று முன்தினம் உரையாற்றினார்.
அப்போது, ”உலக அளவில், வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் பொறுப்புமிக்க கூட்டாளியாக இந்தியா அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இது, தெற்கின் குரலாகவும் சர்வதேச அரங்கில் உருவெடுத்து வருகிறது.
”தலைமை சக்தியாக உருவாக வேண்டும் என்ற நம் நாட்டின் தணியாத தாகத்தையே இது உணர்த்து கிறது,” என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement