புதுடில்லி,’குறிப்பிட்ட காலம் படிக்க வேண்டும் என்பது இல்லாமல், தகுதியான, ‘கிரெடிட்’ எனப்படும் தகுதி மதிப்பெண் பெற்றாலே, சான்றிதழ், பட்டயம், பட்டம் பெறுவதற்கான வாய்ப்பு அளிக்க வேண்டும்’ என, யு.ஜி.சி., எனப்படும் பல்கலை மானியக் குழுவின் நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது.
சான்றிதழ்
புதிய கல்விக் கொள்கையின்படி, கல்லுாரிகளில் குறிப்பிட்ட ஆண்டுக்கான படிப்புகளில், இடையில் மாணவர்கள் வெளியேறினாலும், அவர்கள் படித்த காலத்தின் அடிப்படையில், சான்றிதழ், பட்டயம் அல்லது பட்டம் அளிக்கப்படும்.
இந்த முறை தொடர்பாக, யு.ஜி.சி., எனப்படும் பல்கலை மானியக் குழுவின் நிபுணர் குழு ஆய்வு செய்துஉள்ளது.
அது அளித்துள்ள பரிந்துரையில் கூறப்பட்டு உள்ளதாவது:
குறிப்பிட்ட ஆண்டுகள் படித்தால் தான், சான்றிதழ், பட்டயம் அல்லது பட்டம் பெற முடியும் என்ற நிலை உள்ளது.
வாய்ப்பு
இதில் சிறிது மாற்றம் செய்து, மாணவர்கள் குறிப்பிட்ட அளவுக்கு கிரெடிட் மதிப்பெண்கள் பெற்றாலே, அதனடிப்படையில் சான்றிதழ், பட்டயம் அல்லது பட்டம் பெறுவதற்கான வாய்ப்பு தரப்பட வேண்டும்.
இதை இளநிலை மற்றும் முதுநிலை பட்டப் படிப்புகளுக்கும் அறிமுகம் செய்ய வேண்டும்.
இதனால், அதிக காலம் காத்திராமல், மாணவர்கள் தங்களுக்கு வேண்டிய தகுதியை நிர்ணயித்து கொள்ள முடியும். மேலும், இது அவர்களுடைய கல்வித் திறனை உயர்த்தவும் வாய்ப்புள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement