புதுடில்லிபல்வேறு பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் நேற்று ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இது குறித்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறியதாவது:
நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை 7 சதவீதம் உயர்த்தப்பட்டு உள்ளது.
இதையடுத்து, குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு 143 ரூபாய் உயர்த்தப்பட்டு 2,183 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நிலக்கடலை எண்ணெய்க்கான குறைந்தபட்ச ஆதரவு விலை 9 சதவீதமாக உயர்த்தப்பட்டு, ஒரு குவிண்டால் விலை 4,000 ரூபாயில் இருந்து 6,377 ரூபாயாக அதிகரித்து உள்ளது.
எள் விதைகளுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை 10.3 சதவீதமும், நீள பருத்திக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை 10 சதவீதமும், நடுத்தர பருத்திக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை 8.9 சதவீதமும், பச்சைப் பயிறுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை 10.4 சதவீதமும் உயர்த்தப்பட்டுஉள்ளன.
ஜவ்வரிசி, கேழ்வரகு, மக்காச்சோளம், உளுந்து, துவரம் பருப்பு, சூரியகாந்தி விதைகள், எண்ணெய் உள்ளிட்ட பொருட்களின் குறைந்தபட்ச ஆதரவு விலை 6 சதவீதம் முதல் 7 சதவீதம் வரை உயர்த்தப்பட்டு உள்ளது. இதன் வாயிலாக நம் விவசாயிகள் பலன் பெறுவர்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement