பட்ஜெட் விலை மாடல் மற்றும் அதிக மைலேஜ் தரக்கூடிய 2023 ஹீரோ பேஷன் பிளஸ் பைக் விற்னைக்கு ₹ 75,691 விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. i3S நுட்பத்துடன் அலாய் வீல் பெற்றதாக வந்துள்ளது.
டிரம் பிரேக் ஆப்ஷனை மட்டும் பெற்றுள்ள பேஷன் பிளஸ் பைக்கிற்கு போட்டியாக ஹீரோ நிறுவனத்தின் ஸ்பிளெண்டர் பிளஸ், ஹோண்டா ஷைன் 100, பஜாஜ் பிளாட்டினா 100 போன்ற பைக்குகள் உள்ளன.
2023 Hero Passion Plus
பிரசத்தி பெற்ற பேஷன் பிளஸ் பைக் மாடலில் 97.2 சிசி ஏர் கூல்டு சிங்கிள் சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 7.91 bhp at 8,000 rpm பவர் மற்றும் 8.05 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 4 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.
‘யூஎஸ்பி சார்ஜர் போர்ட், சைட் ஸ்டான்டு கட் ஆஃப் சுவிட்ச், சில்வர் ரிம் டேப் சுற்றப்பட்ட வீல், செமி அனலாக் முறையிலான கிளஸ்ட்டர் கொண்டிருக்கும். ட்யூபெல்ஸ் டயருடன் 80/100-18 வழங்கப்பட்டு இரு பக்க டயர்களிலும் 130mm டிரம் பிரேக் கொடுக்கப்பட்டுள்ளது.
HF டீலக்ஸ் மற்றும் ஸ்பிளெண்டர் பிளஸ் பைக்கிற்கு இடையில் நிலை நிறுத்தப்பட்டுள்ள பேஷன் பிளஸ் பைக்கில் டெலஸ்கோபிக் ஃபோர்க்குடன் பின்புறத்தில் ட்வீன் ஷாக் அப்சார்பர் உள்ளது.
2023 ஹீரோ பேஷன் பிளஸ் பைக்கின் பரிமாணங்கள் 1982mm நீளம், 770mm அகலம் மற்றும் 1087mm உயரம் பெற்றுள்ளது. பைக்கின் வீல்பேஸ் 1235mm, இருக்கை உயரம் 790mm மற்றும் கிரவுண்ட் கிளியரண்ஸ் 168mm மொத்த எடை 115 கிலோ கொண்டுள்ளது. 11 லிட்டர் பெட்ரோல் டேங்க் பெற்றுள்ளது.
2023 ஹீரோ PASSION + I3S DRUM BRAKE SELF START ALLOY WHEEL விலை ₹ 75691 (எக்ஸ்ஷோரூம்)
ஹீரோ பேஷன் பிளஸ் பைக்கின் என்ஜின் விபரம் ?
ஹீரோ பேஷன் பிளஸ் பைக்கில் 97.2 சிசி ஏர் கூல்டு சிங்கிள் சிலிண்டர் என்ஜின் அதிகபட்சமாக 7.91 bhp at 8,000 rpm பவர் மற்றும் 8.05 Nm டார்க் வெளிப்படுத்தும்.
ஹீரோ பேஷன் பிளஸ் 100 போட்டியாளர்கள் யார் ?
HF டீலக்ஸ், ஹோண்டா ஷைன் 100, டிவிஎஸ் ஸ்போர்ட், பஜாஜ் பிளாட்டினா 100 பைக்குகளுக்கு கடும் சவாலினை ஹீரோ பேஸ்ன் பிளஸ் ஏற்படுத்தும்.
2023 Hero Passion Plus image gallery