ரோம்: இத்தாலி பார்லிமென்டில், அந்நாட்டு பெண் எம்.பி., ஒருவர் , அழுத தனது 2 மாத குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த செயலுக்கு மற்ற எம்.பி.,க்கள் பாராட்டினர்.
36 வயதான பெண் எம்.பி., கில்டா ஸ்போர்டெல்லோ என்பவர் பார்லிமென்டிற்கு தனது 2 மாத ஆண் குழந்தையுடன் வந்திருந்தார். அப்போது, குழந்தை திடீரென அழத் துவங்கியது. இதனை கேட்ட பார்லிமென்ட் அமைதியானது. குழந்தை பசிக்காக அழுவதை தெரிந்து கொண்ட கில்டா ஸ்போர்டெல்லோ அங்கேயே குழந்தையை அமைதிப்படுத்தி பாலூட்ட துவங்கினார்.
இதன் மூலம் இத்தாலி பார்லிமென்டில் குழந்தைக்கு பாலூட்டிய முதல் பெண் எம்.பி., என்ற பெருமை இவருக்கு கிடைத்தது. பெண் வழக்கறிஞரான கில்டா ஸ்போர்டெல்லோ, பெண்கள் உரிமைக்காகவும், வேலைக்கு செல்லும் தாய்மார்களின் உரிமைக்காகவும் போராடியவர் ஆவார்.
சமீபத்தில் தான் பெண் எம்.பி.,க்கள் குழந்தையை பார்லிமென்டிற்கு அழைத்து வரவும், ஒரு வயது வரை குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கவும் விதிகளில் மாற்றம் கொண்டு வரப்பட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement