சென்னை நடிகை தமன்னாவுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சர்ப்ரைஸ் கிப்ட் ஒன்று கொடுத்து அவரை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளார்.
ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் 70சதவீத படப்பிடிப்பு முடிந்த நிலையில் அடுத்தகட்ட பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இப்படத்தில், ரம்யா கிருஷ்ணன்,தமன்னா, மோகன்லால், ஜாக்கி ஷெராப் ஆகியோர் நடித்து வருகின்றனர். ஜெயிலர் படத்தைத் தொடர்ந்து, ஜெய் பீம் இயக்குநர் ஞானவேல் இயக்கும் படத்தில் ஒப்பந்தமாகி உள்ளார்.
ஜெயலர் : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த எந்திரன் படத்திற்கு பிறகு அவர் நடிப்பில் வெளியான படங்கள் எதுவும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வெற்றிபெறவில்லை. ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த படம் மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்தது. இதனால், ரஜினியின் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.
ஆக்ஷன் படம் : அண்ணாத்த படத்தின் விமர்சனத்திற்கு பிறகு, அடுத்த வெற்றியை கொடுத்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் ரஜினிகாந்த் இருக்கிறார். நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகின்றார் ரஜினி. இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இப்படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். ஆக்ஷன் கலந்த டார்க் காமெடி படமாக ஜெயிலர் உருவாகி வருகிறது.
படத்தின் கதை : இப்படத்தில் ரஜினி ஜெயிலராக இருக்கிறார். அந்த ஜெயிலில் இருந்து கைதிகள் தப்பிக்க முயற்சி செய்கின்றனர். அதை ரஜினி எப்படி தடுத்து நிறுத்துகிறார். இதனால் அவருக்கும் வில்லன்களுக்கும் மோதல் வெடிக்கின்றது. அதன் பிறகு நடப்பதே ஜெயிலர் படத்தின் கதை. இந்த கதையை கேட்டதில் இருந்து ரசிகர்கள் படத்தை பார்க்க ஆர்வமாக உள்ளனர்.
சூப்பர் கிப்ட் : இந்நிலையில் ஜெயிலர் படத்தில் ரஜினியுடன் நடித்த நடிகை தமன்னா ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், ரஜினியுடன் நடிக்க வேண்டும் என்பது என் பல நாள் கனவு தற்போது நனவாகியுள்ளது. இந்தப்படத்தின் படப்பிடிப்பின் போது ரஜினிகாந்த் எனக்கு ஆன்மீக பயணத்திற்கான புத்தகம் ஒன்றை பரிசாக அளித்தார். அதில் அவர் கையெழுத்தும் போட்டு கொடுத்துள்ளார். இதை நான் என்றும் மறக்கமாட்டேன் என்று தமன்னா மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.