இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
Selvaraghavan movie second hero: காதல் கொண்டேன் பட செகண்ட் ஹீரோ ஆதியா இது என அவரின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்த தமிழ் ரசிகர்கள் வியக்கிறார்கள்.
காதல் கொண்டேன்செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ், சோனியா அகர்வால் உள்ளிட்டோர் நடித்த காதல் கொண்டேன் படம் கடந்த 2003ம் ஆண்டு ரிலீஸாகி பெரிய அளவில் வெற்றி பெற்றது. அந்த படத்தில் செகண்ட் ஹீரோ ஆதியாக நடித்திருந்தார் சுதீப். செல்வராகவன் படங்களில் வரும் செகண்ட் ஹீரோக்கள் அனைவரும் ரொம்ப அழகாக இருப்பார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். சுதீப்பும் அதற்கு விலக்கு அல்ல.சுனைனா”ரஜினி சார்னால தான் தமிழ் சினிமாவுக்கு வந்தேன்” சுனைனா ஓபன் டாக்!சுதீப்காதல் கொண்டேன் படத்திற்கு பிறகு சுதீப்புக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதன் பிறகு அவரை தமிழ் ரசிகர்கள் கிட்டத்தட்ட மறந்தே போனார்கள். இந்நிலையில் தான் சுதீப் டாக்சி ஓட்டும் புகைப்படம் வெளியாகி வைரலானது. அவர் காக்கிச் சட்டை, பேண்ட் அணிந்து டாக்சி ஓட்டுவதை பார்த்த ரசிகர்களோ, எப்படி இருந்த மனுஷனுக்கு இப்படியொரு பரிதாப நிலையா என பேசத் துவங்கிவிட்டார்கள்.
விளம்பரம்ரசிகர்கள் பரிதாபப்படும் வகையில் சுதீப் டாக்சி எல்லாம் ஓட்டவில்லை. அவர் இன்னும் நடிகராகத் தான் இருக்கிறார். அவர் இந்தி மற்றும் பெங்காலி மொழி படங்கள், தொலைக்காட்சி தொடர்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். மேலும் விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார். சுதீப் டாக்சி ஓட்டுவது போன்று வெளியான புகைப்படம் ஒரு விளம்பர படத்திற்காக எடுக்கப்பட்டது.
இன்ஸ்டாMegha Akash: பிரபல அரசியல்வாதியின் மருமகளாகும் நடிகை மேகா ஆகாஷ்?சுதீப் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கிறார். அவ்வப்போது தன் புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். தான் காக்கிச் சட்டையில் இருக்கும் புகைப்படங்களை சுதீப் வெளியிட்டார். அதை பார்த்த ரசிகர்களோ, அவர் குடும்ப வறுமை காரணமாக டாக்சி ஓட்டுவதாக தவறாக புரிந்து கொண்டுவிட்டார்கள். சுதீப் தற்போது ஆள் வித்தியாசமாக இருக்கிறார். அவரின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்த தமிழ் ரசிகர்களோ, காதல் கொண்டேன் பட ஆதியா சார் நீங்கள் என ஆச்சரியமாக கேள்வி எழுப்பியுள்ளனர்.
வியப்புகாதல் கொண்டேன் படம் ரிலீஸாகி 20 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆதியை பார்த்தால் அடையாளமே தெரியவில்லை. இவர் தான் ஆதியாக நடித்தார் என்று நம்ப முடியாத அளவுக்கு இருக்கிறார். ஆனால் தனுஷுக்கு மட்டும் வயதே ஆகவில்லை. அப்படியே இருக்கிறார். இளமையின் ரகசியத்தை தனுஷிடம் இருந்து தான் கற்றுக்கொள்ள வேண்டும் என்கிறார்கள் ரசிகர்கள்.
போட்டோகாதல் கொண்டேன் படத்தை சுதீப் இன்னும் மறக்கவில்லை. படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்து கொண்டிருக்கிறார். சாக்லேட் பாய் மாதிரி இருந்த சுதீப் இப்படியாகிவிட்டார் என்று எங்களால் நம்பவே முடியவில்லை என்கிறார்கள் தமிழ் ரசிகர்கள். வயது ஆக ஆக ஆள் மாறத் தானே செய்வார்கள். அதை தடுத்து நிறுத்த முடியாதே.
கோரிக்கைசுதீப் மீண்டும் தமிழ் படங்களில் நடிக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சுதீப்பை மீண்டும் தன் இயக்கத்தில் நடிக்க வைக்க வேண்டும் செல்வராகவன் என்பதே ரசிகர்களின் விருப்பம். அவர்களின் விருப்பத்தை செல்வராகவன் நிறைவேற்றி வைப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.