பாலக்காடு:தேசிய உணவு பாதுகாப்பு பட்டியலில், கேரள மாநிலம் முதலிடம் பிடித்துள்ளது. உணவு பாதுகாப்பு ஆணையத்தின் பட்டியலில், முதல் முறையாக கேரள மாநிலம் முதலிடத்தை பிடித்துள்ளது.
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவ்யாவிடம் இருந்து, மாநில உணவு பாதுகாப்பு ஆணையர் வினோத், இதற்கான கோப்பை மற்றும் விருதை பெற்றுள்ளார்.
கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறியதாவது:
கேரளா, உணவு பாதுகாப்பில் சரியாகவும், முறையாகவும் செயல்பட்டதற்கு கிடைத்த அங்கீகாரம் கிடைத்துள்ளது.
‘உணவு பாதுகாப்பு கிராம பஞ்சாயத்து’ என்ற திட்டம், மாநிலத்தில் உள்ள, 140 பஞ்சாயத்துகளில் செயல்படுத்த முடிந்தது. சுமார், 500 பள்ளிகளை தேர்ந்தெடுத்து ‘பாதுகாப்பான மற்றும் சத்தான உணவு’ என்ற திட்டத்தை செயல்படுத்த முடிந்தது.
பொதுமக்களுக்காக மாநில அளவில், சுமார், மூவாயிரம் உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு வகுப்புகள் நடத்த முடிந்தது. இதுவே, உணவு பாதுகாப்பு பட்டியலில் இடம் பிடிக்க முக்கிய காரணமாகும்.
அதேபோல் ‘சிறு தானிய ஆண்டு 2023’ அனுசரிப்பின் ஒரு பகுதியாக, மாநிலத்தில் அனைத்து மாவட்டங்களிலும், 148 உணவு கண்காட்சி நடத்தியதை மதிப்பிட்டு, அதிக கண்காட்சி நடத்திய மாநிலம் என்ற சிறப்பு விருதும் கேரளாவுக்கு கிடைத்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement