இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
Leo pre release business: விஜய்யின் லியோ படம் ரிலீஸுக்கு முந்தைய வியாபாரத்தில் புது சாதனை படைத்திருக்கிறது.
லியோலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் படம் லியோ. அதில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடித்து வருகிறார். பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ஆக்ஷன் கிங் அர்ஜுன், மிஷ்கின், கவுதம் மேனன், மதுசூதன் ராவ் என ஒரு வில்லன் பட்டாளமே இருக்கிறது. லியோ படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. இந்நிலையில் தான் லியோ படம் புது சாதனைகள் படைத்துள்ளது.சுனைனா”ரஜினி சார்னால தான் தமிழ் சினிமாவுக்கு வந்தேன்” சுனைனா ஓபன் டாக்!ஓடிடிவிஜய்யின் படத்திற்கு தியேட்டர்களில் மட்டும் அல்ல டிஜிட்டல் பிளாட்ஃபார்ம்களிலும் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் தான் லியோ படத்தின் டிஜிட்டல் உரிமை ரூ. 120 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டிருக்கிறது. டிஜிட்டலில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்ட தமிழ் படம் என்கிற பெருமையை பெற்றிருக்கிறது லியோ.
சாட்டிலைட்லோகேஷ் கனகராஜ் எந்த அப்டேட்டும் கொடுக்காமல் படப்பிடிப்பை நடத்தி வந்தாலும் லியோ மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்நிலையில் தான் லியோவின் சாட்டிலைட் உரிமத்தை பிரபல தொலைக்காட்சி சேனல் ரூ. 80 கோடிக்கு வாங்கியிருக்கிறது என தகவல் வெளியாகியுள்ளது.
ஆடியோலியோ படத்திற்கு அனிருத் ரவிசந்தர் இசையமைத்துள்ளார். விஜய்யின் அறிமுக பாடலுக்கு அவர் கொல மாஸான டியூன் போட்டிருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. லியோ படத்தின் பாடல்கள் அனைத்தும் ஹிட்டாகும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்நிலையில் லியோ படத்தின் ஆடியோ உரிமத்தை ரூ. 16 கோடிக்கு விற்பனை செய்திருக்கிறார்களாம்.
தியேட்டர்Leo:விஜய்யின் கோட்டையில் ரஜினியின் 2.0 பட சாதனையை முறியடித்த லியோலியோ படத்தின் வெளிநாட்டு தியேட்டர் உரிமம் ரூ. 60 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டில் அதிக விலைக்கு விற்பனையான தமிழ் படம் லியோ ஆகும். மேலும் கேரளா தியேட்டர் உரிமம் ரூ. 16 கோடிக்கு சென்றிருக்கிறது. கேரளாவில் அதிக விலைக்கு போன தமிழ் படம் என்கிற பெருமையை பெற்றிருக்கிறது லியோ. முன்னதாக கேரளாவில் அதிக விலைக்கு போன தமிழ் படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 2.0 ஆகும். ரஜினி பட சாதனையை லியோ முறியடித்துள்ளது.
ஷூட்டிங்லியோ படத்தில் வரும் விஜய்யின் அறிமுக பாடலை தான் தற்போது சென்னையில் ஷூட் செய்து வருகிறார் லோகேஷ் கனகராஜ். ஷங்கர் படம் போன்று அந்த பாடல் மிகவும் பிரமாண்டமாக இருக்குமாம். இது குறித்து அறிந்த ரசிகர்களோ, இது லோகேஷ் ஸ்டைலே இல்லையே. என்னமோ இருக்கு என தெரிவித்துள்ளனர். லியோ படத்தை அக்டோபர் மாதம் 19ம் தேதி ரிலீஸ் செய்ய முடிவு செய்திருக்கிறார்கள்.
7