இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
விறுவிறுப்புலோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் லியோ படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த ஜனவரி மாதம் துவங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பை விறுவிறுப்பாக நடத்தி வருகின்றார் லோகேஷ். காஷ்மீர் மற்றும் சென்னையில் இப்படத்தின் படப்பிடிப்பு நடத்தப்பட்ட நிலையில் தற்போது ஜூன் 12 ஆம் தேதி இப்படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவடைய இருக்கின்றது. தற்போது இப்படத்தின் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டு வரும் நிலையில் அடுத்ததாக கிளைமாக்ஸ் சண்டை காட்சிகளை படமாக்க லோகேஷ் திட்டமிட்டுள்ளார்
சர்ப்ரைஸ்லியோ படத்தில் ஏகப்பட்ட சர்ப்ரைஸ் இருக்கும் என்பதே ரசிகர்களின் கணிப்பாக இருக்கின்றது. எப்படி கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் லோகேஷ் ஏகப்பட்ட சர்ப்ரைஸை வைத்தாரோ அதே போல லியோவிலும் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் வகையில் நிறைய சர்ப்ரைஸை வைத்திருப்பார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இதையடுத்து இப்படம் LCU வாக இருக்கும் பட்சத்தில் லியோவில் கமல், கார்த்தி, விஜய் சேதுபதி ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் வரவும் வாய்ப்புகள் இருகின்றது. அவ்வாறு அவர்கள் சிறப்பு தோற்றத்தில் லியோ படத்தில் வந்தால் ரசிகர்களுக்கு செம விருந்தாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. மேலும் லியோ படத்தின் கதைக்களமும் பல திருப்பங்களை கொண்டதாக இருக்கும் என்பதால் இப்படத்தின் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றது
ஹைலைட்ஸ்லியோ படத்தில் ஹைலைட்டான விஷயங்கள் பல இருக்கின்றன. குறிப்பாக இப்படம் முழுக்க முழுக்க லோகேஷின் ஸ்டைலிலேயே உருவாகி வருகின்றது. எனவே லோகேஷ் லியோவில் வித்யாசமான விஜய்யை காண்பிப்பார் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகின்றது. இதைத்தவிர இப்படத்தில் ரொமான்டிக் காட்சிகளும் இடம்பெறுகின்றதாம். பொதுவாக லோகேஷின் படங்களில் ரொமான்டிக் காட்சிகள் அதிகம் இடம்பெறாத நிலையில் இப்படத்தில் ரொமான்டிக் காட்சிகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் விஜய்யுடன் 14 வருடங்களுக்கு பிறகு த்ரிஷா இப்படத்தின் மூலம் மீண்டும் இணைந்துள்ளார். எனவே இவ்வாறு பல ஹைலைட்டான விஷயங்கள் லியோ படத்தில் இருக்கின்றது
டீசர்இன்னும் சில தினங்களில் லியோ படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவடைய இருக்கின்றது. ஜூன் 12 ஆம் தேதி லியோவின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிந்துவிடும் என தகவல்கள் வருகின்றன. இதையடுத்து விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு லியோ படத்தின் டீசரை லோகேஷ் ரெடி செய்து வருகிறாராம்.. பல சர்ப்ரைஸான விஷயங்களை வைத்து லோகேஷ் லியோ டீசரை உருவாக்க இருக்கிறாராம். எப்படி விக்ரம் படத்தின் ட்ரைலர் ரசிகர்களை திருப்திபடுத்தியதோ அதே போல லியோ டீசரும் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.மேலும் சர்ப்ரைஸ் மட்டுமல்லாமல் லியோ டீசரில் லோகேஷ் மிகப்பெரிய சஸ்பென்ஸையும் வைப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது குறிப்பிடத்தக்கது