இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
கடந்த ஆறு மாதகாலமாக அதிகம் பேசப்பட்டு வரும் டாபிக்காக லியோ திரைப்படம் மாறியுள்ளது. சொல்லப்போனால் வாரிசு படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும்போதே லியோ படத்தை பற்றி ரசிகர்கள் பேச துவங்கிவிட்டனர். அதற்கு விஜய் மற்றும் லோகேஷின் கூட்டணியும், விக்ரம் படத்தின் வெற்றியும் தான் காரணம்.
உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தை முழுக்க முழுக்க தன் ஸ்டைலில் இயக்கி ரசிகர்களை வியக்கவைத்தார் லோகேஷ். அதன் பிறகு அவர் இந்தியளவில் பிரபலமான இயக்குனராக உருவெடுத்தார். எனவே இவர் அடுத்ததாக தளபதியுடன் இணைகிறார் என்றவுடன் தமிழ் திரையுலகமே பரபரப்பானது.
எதிர்பார்ப்பில் லியோ
இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் லியோ படத்தின் படப்பிடிப்பு துவங்கப்பட்டு தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. முதல்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்ற நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்புகள் சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. தற்போது லியோ படத்தின் மிகப்பிரமாண்டமான பாடல் படமாக்கப்பட்டு வருகின்றது.
Leo: லியோ ஓப்பனிங் பாடலில் இவ்ளோ விஷயம் இருக்கா ? தளபதி ரசிகர்களுக்கு செம ட்ரீட் கன்பார்ம்..!
சுமார் 2000 நடனக்கலைஞர்களை வைத்து இப்பாடல் மிகப்பிரமாண்டமாக உருவாக்கி வருகின்றதாம். மேலும் இப்பாடலை விஜய்யே பாடியுள்ளார் என்றும் தகவல்கள் வருகின்றன. ஆனால் இதைப்பற்றி எந்த ஒரு அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இருந்தாலும் லியோ படத்தில் இப்பாடல் ஹைலைட்டாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
இதையடுத்து இன்னும் ஒரே ஒரு சண்டை காட்சி மட்டும் தான் படமாக்கப்பட இருக்கின்றதாம். எனவே ஜூன் 12 ஆம் தேதிக்குள் லியோ படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து விடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் இப்படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் விரைவில் துவங்கவுள்ள நிலையில் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் டீசர் அல்லது கிலிம்ப்ஸ் வீடியோ வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
லோகேஷின் ஐடியா
லியோ படத்தின் அப்டேட் வெளியாகி பல மாதங்கள் ஆகிவிட்டதால் கண்டிப்பாக விஜய்யின் பிறந்தநாளன்று மிகப்பெரிய அப்டேட் வெளியாகும் என அனைவரும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் லியோ திரைப்படம் அக்டோபர் மாதம் வெளியாகவுள்ள நிலையில் தற்போதே இப்படத்தின் ப்ரோமோஷன்களை பற்றி லோகேஷ் யோசிக்க துவங்கிவிட்டாராம்.
அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்
விக்ரம் படத்திற்கு
கமல்
உட்பட அனைவரும் ப்ரோமோஷனில் கலந்துகொண்டதை போல் லியோ படத்தின் புரமோஷன்களுக்கும் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என லோகேஷ் ஆசைப்படுகின்றாராம். என்னதான் லியோ இசை வெளியீட்டு விழா மிகப்பிரம்மாண்டமாக நடைபெற இருந்தாலும் தனியாக ப்ரோமோஷன்களை செய்ய லோகேஷ் விரும்புகின்றார்.
எனவே பீஸ்ட் படத்தின் ப்ரோமோஷனுக்காக விஜய் பேட்டி கொடுத்ததை போல லியோ படத்திற்காகவும் விஜய்யை பேட்டி கொடுக்கும்படி கேட்டுள்ளார் லோகேஷ் என் செய்திகள் வருகின்றன. மேலும் இதுமட்டுமல்லாமல் விஜய்யை வைத்து பல ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளை யோசித்துள்ளாராம் லோகேஷ்.
ஆனால் இதற்கெல்லாம் விஜய் ஓகே சொல்வாரா என்பது தான் கேள்வியாக இருக்கின்றது. அவ்வாறு விஜய் இந்த ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளுக்கு ஓகே சொன்னால் அது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ட்ரீட்டாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.