இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
லியோ படத்தை பற்றித்தான் ஒட்டுமொத்த திரையுலகமே பேசி வருகின்றது. கடத்த ஆறு மாதங்களுக்கு மேலாக லியோ படத்தை பற்றி கோலிவுட் வட்டாரம் உட்பட ஒட்டுமொத்த இந்திய திரையுலகமும் பேசி வருகின்றது. இன்னும் படம் வெளியாக கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் இருக்கும் நிலையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன.
என்னதான் தளபதி 68 படத்தின் அறிவிப்பு வெளியானாலும் லியோ படத்தின் மவுசு குறைந்த பாடில்லை. இந்நிலையில் வெங்கட் பிரபு மற்றும் விஜய் கூட்டணியில் உருவாகும் தளபதி 68 படத்தை AGS நிறுவனம் தயாரிக்கின்றது. இதன் அறிவிப்பு வெளியாகி சில வாரங்கள் ஆன நிலையில் படத்தை பற்றி பல தகவல்கள் இணையத்தில் வெளியான வண்ணம் இருக்கின்றன.
Leo: லியோ டீசரில் இடம்பெறும் கமல் ? அடேங்கப்பா..செம ட்விஸ்ட்டா இருக்கே..!
படத்தின் கதை பற்றியும், படத்தில் நடிப்பவர்கள் பற்றியும் தினம் தினம் ஒரு தகவல் வந்துகொண்டே தான் இருந்து வருகின்றது. சமீபத்தில் கூட தளபதி 68 படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஜோதிகா நடிக்க இருப்பதாக செய்திகள் வந்தன. ஒருவேளை இந்த தகவல் உண்மையானால் திருமலை படத்திற்கு பிறகு 20 வருடங்கள் கழித்து மீண்டும் இக்கூட்டணி இணையும் வாய்ப்பு அமையும்.
மீண்டும் இணையும் விஜய் -எஸ்.ஜெ சூர்யா
அதற்காக தான் ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர் என்றே சொல்லலாம். இது ஒருபக்கம் இருக்க மறுபக்கம் மற்றுமொரு தகவல் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்து வருகின்றது. என்னவென்றால் தளபதி 68 படத்தில் வில்லனாக நடிகர் எஸ்.ஜெ சூர்யா நடிப்பதாக கடந்த சில நாட்களாக ஒரு தகவல் பரவி வருகின்றது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான மாநாடு படத்தில் வில்லனாக நடித்து அனைவரையும் அசத்தியிருப்பார் எஸ்.ஜெ சூர்யா. மேலும் விஜய்யை வைத்து குஷி படத்தை இயக்கிய எஸ்.ஜெ சூர்யா மெர்சல் படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்திருந்தார். இந்நிலையில் இவர் தற்போது தளபதி 68 படத்தின் மூலம் மீண்டும் விஜய்யுடன் இணைகிறார் என்ற செய்தி அனைவரையும் எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது.
பொம்மை பாடலை வெளியிட்ட லோகேஷ்
இதையடுத்து தற்போது விஜய் மற்றும் எஸ்.ஜெ சூர்யா லியோ படப்பிடிப்பு தளத்தில் சந்தித்துள்ளனர். எஸ்.ஜெ சூர்யா நடிப்பில் வெளியாகவுள்ள பொம்மை படத்தின் பாடல் வெளியீடு லியோ படப்பிடிப்பு தளத்தில் நடைபெற்றது. இப்படத்தின் பாடலை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டார்.
Tamil அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்
இதைகேள்விப்பட்ட விஜய் உடனே எஸ்.ஜெ சூர்யாவை சந்தித்து பேசியுள்ளார். இந்த செய்தி தான் தற்போது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது. எஸ்.ஜெ சூர்யா மற்றும் விஜய் தளபதி 68 படத்தில் இணைந்து நடிக்கிறார்கள் என பேசப்பட்டு வந்த நிலையில் தற்போது இவர்கள் திடீரென சந்தித்தது பேசுபொருளாக மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.