தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழ்கிறார் விஜய். கோலிவுட் சினிமாவில் பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வரும் இவரின் ஒவ்வொரு பட ரிலீசை மட்டுமில்லாமல், இவர் படங்களின் அப்டேட்கள் வெளியாவதையும் கொண்டாடி தீர்ப்பார்கள் ரசிகர்கள். இந்நிலையில் விஜய் தன்னுடைய 49 வது பிறந்தநாளை வரும் ஜுன் 22 ஆம் தேதி கொண்டாடவுள்ளார். இந்த நாளில் விஜய் படங்களின் அப்டேட்கள் எதுவும் வெளியாகுமா என ரசிகர்கள் ஆர்வமுடன் காத்து வருகின்றனர்.
இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
‘வாரிசு’ படத்தினை தொடர்ந்து ‘லியோ’ படத்தில் நடித்து வருகிறார் விஜய். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு மத்தியில் இந்தப்படம் உருவாகி வருகிறது. செவன் ஸ்கிரீன் ஸ்டிடுயோ பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்தப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார். இதன் முதல்கட்ட படப்பிடிப்பு ஒரு மாதத்திற்கு மேலாக காஷ்மீரில் நடந்தது.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
அங்கு படப்பிடிப்பை முடித்ததும் ஸ்பெஷல் வீடியோ ஒன்றை வெளியிட்டனர் படக்குழுவினர். கொட்டும் பனியில் ‘லியோ’ படக்குழுவினர் இரவு, பகல் பாராமல் டெடிகேஷனுடன் வேலை பார்த்த காட்சிகள் அந்த வீடியோவில் இடம்பெற்றிருந்தது. ‘லியோ’ படத்தில் நீண்ட இடைவேளைக்கு விஜய்யுடன் திரிஷா இணைந்து நடித்து வருகிறார்.
மேலும், இந்தப்படத்தில் கேஜிஎப் வில்லன் சஞ்சய் தத், பிரபல இயக்குனர்கள் மிஷ்கின், கெளதம் மேனன், பிரியா ஆனந்த், மேத்யூ தாமஸ், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் ‘தளபதி 68’ படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அண்மையில் வெளியானது.
Leo: ‘லியோ’ படத்திற்காக தளபதி செய்துள்ள காரியம்: தரமான ட்விஸ்ட் இருக்கு.!
ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகவுள்ள இந்தப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார். ‘தளபதி 68’ படம் குறித்த அறிவிப்பு வெளியானதில் இருந்து டிரெண்டிங்கில் கலக்கி வருகிறது. இந்நிலையில் வரும் ஜுன் 22 ஆம் தேதி விஜய் பிறந்தநாளை முன்னிட்டு ‘லியோ’ படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்று வெளியாகவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. மேலும் இந்த வீடியோவிற்கு கமல் வாய்ஸ் ஓவர் கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த கிளிம்ப்ஸ் வீடியோவுடன் ‘தளபதி 68’ டைட்டில் வெளியாகவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த டபிள் ட்ரீட் குறித்த தகவலால் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். ஆனாலும் ‘லியோ’ பட ரிலீஸ் வரை ‘தளபதி 68’ படம் குறித்த எந்த தகவலும் வெளியில் வரக்கூடாது என விஜய் கண்டிஷன் போட்டுள்ளதால் டைட்டில் ரிலீஸ் ஆவது சந்தேகம் எனவும் கூறப்படுகிறது. எப்படியோ எங்களுக்கு ஒரு அப்டேட் வெளியானாலும் ஹாப்பி தான் என்று தளபதி ரசிகாஸ் விஜய் பிறந்தநாளுக்காக வெறித்தனமாக காத்திருக்கின்றனர்.
Thalapathy 68: ‘தளபதி 68’ பட ஹீரோயின் யார் தெரியுமா.?: தெரிஞ்சா அசந்துடுவீங்க..!