இந்தியாவின் சிறிய ரக வரத்தக வாகன சந்தையில் 23.35km/kg மைலேஜ் தருகின்ற மஹிந்திரா சுப்ரோ சின்ஜி மற்றும் பெட்ரோல் என இரண்டிலும் இயங்கும் சரக்கு டிரக் ரூ.6.32 லட்சம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சுமார் 750 கிலோ சுமை தாங்கும் திறனை கொண்டுள்ள சுப்ரோ மினி டிரக் இந்தியாவின் முதல் இரண்டு எரிபொருளில் இயங்கும் மாடலாக விளங்குகின்றது. நேரடியாக சிஎன்ஜி அல்லது பெட்ரோல் என எதாவது ஒன்றில் வாகனத்தை இயக்க முடியும்.
Mahindra Supro CNG Duo
சிறிய வர்த்தக வாகனப் பிரிவில் முதல் இரட்டை எரிபொருள் கொண்ட சுப்ரோ மாடல் நேரடியாக சிஎன்ஜி எரிபொருளில் இயக்க முடியும். அதிகபட்ச பாதுகாப்பிற்காக நுண்ணறிவு சிஎன்ஜி கசிவு கண்டறிதல் மற்றும் 75 லிட்டர் கொள்ளளவு பெற்ற CNG டேங்கினை நிரப்பினால் சுமார் பேலோட் திறன் 750 கிலோ கொண்டு அதிகபட்சமாக 325 கிமீ வரை பயணிக்கலாம் என மஹிந்திரா தெரிவித்துள்ளது.
27BHP பவர் வழங்கும் BS6 RDE மாசு உமிழ்வுக்கு இணையான என்ஜின் 60 Nm டார்க் வழங்கும். சிஎன்ஜி 23.35 km/kg ஆக சிறந்த மைலேஜை வழங்குகிறது. இந்த வாகனம் 145 R12, 8PR டயர்கள் மற்றும் 158 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டுள்ளது. டயமண்ட் ஒயிட் மற்றும் டீப் வார்ம் ப்ளூ என இரு நிறங்களை பெற்றுள்ளது.
மஹிந்திரா சுப்ரோ சிஎன்ஜி டியோ 3 ஆண்டுகள் / 80,000 கிமீ உத்தரவாதத்துடன் வருகிறது. சுப்ரோ டிரக் கடுமையான, முழு-சோதனை சுழற்சி ஓட்டங்களுக்கு ஏற்றதாகவும், செயல்திறன், பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மை ஆகியவற்றிலும் சரிபார்க்கப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்கள் மஹிந்திராவின் புதிய சுப்ரோ சிஎன்ஜி டியோவை குறைந்த முன்பணம் செலுத்தி முன்பதிவு செய்து கவர்ச்சிகரமான நிதித் திட்டங்களைப் பெறலாம்.