Rajinikanth: ஞாபகம் வருதே ஞாபகம் வருதே… AVM மியூசியத்தை சுற்றிப் பார்த்த ரஜினிகாந்த்!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது லால் சலாம் படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்புக்காக புதுவை சென்றிருந்த ரஜினி, தற்போது சென்னை திரும்பிவிட்டார்.

வீட்டில் ஓய்வில் இருந்த சூப்பர் ஸ்டார் ஏவிஎம் ஸ்டூடியோவில் திறக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்தை பார்வையிட்டார்.

அப்போது அவருடன் இயக்குநர் எஸ்பி முத்துராமன், தயாரிப்பாளர்கள் ஏவிஎம் சரவணன், எம்.எஸ் குகன் ஆகியோரும் உடனிருந்தனர்.

ஏவிஎம் மியூசியத்தை சுற்றிப்பார்த்த சூப்பர் ஸ்டார்:கோலிவுட்டின் ஆல்டைம் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர், லால சலாம் படங்களில் நடித்துள்ளார். இதில் நெல்சன் இயக்கியுள்ள ஜெயிலர் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகிறது. அதனைத் தொடர்ந்து ஐஸ்வர்யா இயக்கி வரும் லால் சலாம் வெளியாகவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்புக்காக புதுவை சென்றிருந்த ரஜினிகாந்த் தற்போது சென்னை திரும்பிவிட்டார்.

 Rajinikanth: Superstar Rajinikanth visited the AVM Heritage Museum

இந்நிலையில், சென்னை வடபழனியில் உள்ள ஏவிஎம் அருங்காட்சியகத்தை நேரில் சென்று பார்த்து ரசித்துள்ளார் சூப்பர் ஸ்டார். ஏவிஎம் ஸ்டூடியோ உள்ளே அமைக்கப்பட்டுள்ள இந்த மியூசியத்தை கடந்த மாதம் முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த அருங்காட்சியகத்தில் ஏவிஎம் ஸ்டூடியோவில் இருந்த பழைய கேமராக்கள், திரைப்பட தயாரிப்புக் கருவிகள், விண்டேஜ் ஸ்டைல் கார்கள் போன்றவை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

 Rajinikanth: Superstar Rajinikanth visited the AVM Heritage Museum

இந்த அருங்காட்சியகத்தை சூப்பர் ஸ்டார் ரஜினியும் இயக்குநர் எஸ்பி முத்துராமனும் நேரில் சென்று பார்த்து ரசித்தனர். அப்போது தயாரிப்பாளர்கள் ஏவிஎம் சரவணன், MS குகன் ஆகியோர் ரஜினியை அருங்காட்சியகம் முழுவதையும் சுற்றிக் காட்டினர். முழுக்க முழுக்க பழமையின் பொக்கிஷங்களால் நிறைந்திருக்கும் ஏவிஎம் மியூசியம் ரஜினியின் பழைய நினைவுகளை மீட்டு வந்திருக்கும் என்பதை அவரது கண்களில் பார்க்க முடிகிறது.

 Rajinikanth: Superstar Rajinikanth visited the AVM Heritage Museum

மியூசியத்தை ரஜினி நெகிழ்ச்சியுடன் சுற்றிப் பார்த்த புகைப்படங்களை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது ஏவிஎம் நிறுவனம். ரஜினியின் ஆரம்ப காலத்தில் அவருக்கு சூப்பர் ஸ்டார் என்ற இமேஜ் வரக் காரணமாக இருந்த பல படங்களை ஏவிஎம் நிறுவனம் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதிலும் பல படங்களை எஸ்பி முத்துராமன் தான் இயக்கியுள்ளார். முரட்டுக் காளை, போக்கிரி ராஜா, நல்லவனுக்கு நல்லவன், மனிதன், ராஜா சின்ன ரோஜா உள்ளிட்ட படங்களை குறிப்பிடலாம்.

இறுதியாக ஏவிஎம் நிறுவனத்துக்காக சிவாஜி படத்தில் நடித்துக் கொடுத்தார் ரஜினி. ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவான இந்தப் படம் 2007ம் ஆண்டு வெளியாகி மிகப் பெரிய ஹிட் அடித்தது. சூப்பர் ஸ்டார் ரஜினிக்கும் ஏவிஎம் நிறுவனத்துக்கு பல ஆண்டு பந்தம் இருப்பது திரையுலகம் அறிந்ததே. இந்தத் தருணத்தில் ஏவிஎம் மியூசியத்தை ரஜினி சுற்றிப் பார்த்தது ரசிகர்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.