Rajinikanth: தளபதி படத்தோட யுனிவர்ஸ் தான் பாட்ஷா… அந்த சீன்ல கவனிச்சீங்களா… அட ஆமாம்ண்ணே!

சென்னை: நடிகர், திரைக்கதை எழுத்தாளர் என சினிமாவில் பன்முகத்தன்மையுடன் பயணிப்பவர் கிட்டி.

சமீபத்தில் ஃபர்ஹானா, பிச்சைக்காரன் 2 ஆகிய படங்களிலும் நடித்திருந்தார்.

இந்நிலையில், ரஜினியுடன் தளபதி, பாட்ஷா படங்களில் நடித்தது குறித்து மனம் திறந்துள்ளார்.

மேலும், தளபதி படத்தின் சீக்வெல் தான் பாட்ஷா எனவும் அவர் கூறியுள்ளது வைரலாகி வருகிறது.

தளபதி படத்தோட சீக்வெல் தான் பாட்ஷா:ஹாலிவுட் ரசிகர்கள் மட்டுமே தெரிந்து வைத்திருந்த யுனிவர்ஸ், சீக்வெல் என்ற வார்த்தைகள் இன்று படு பிரபலமாகிவிட்டது. இதற்கெல்லாம் லோகேஷ் கனகராஜ் தான் முக்கியமான காரணம் எனலாம். இந்நிலையில் 1990களின் காலக்கட்டத்தில் ரஜினி நடிப்பில் வெளியான தளபதி, பாட்ஷா படங்கள் இரண்டுமே ஒரே யுனிவர்ஸ் என நடிகர் கிட்டி கூறியுள்ளார்.

மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்த நாயகன் திரைப்படம் 1987ம் ஆண்டு வெளியானது. ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்த இந்தப் படத்தில் ‘சக்திவேலு’ என்ற கேரக்டரின் அப்பாவாக அறிமுகமானவர் கிட்டி என்ற ராஜா கிருஷ்ணமூர்த்தி. மணிரத்னத்தின் அசோஸியேட்டாகவும் நடிகராகவும் தொடர்ந்து திரைத்துறையில் பயணித்து வருகிறார் கிட்டி. சமீபத்தில் ஃபர்ஹானா, பிச்சைக்காரன் 2 ஆகிய படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு பிரபல யூடியூப் தளத்துக்கு பேட்டியளித்த கிட்டி, தளபதி படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடித்தது குறித்து பேசியுள்ளார். மணிரத்னம் இயக்கிய தளபதி படத்தின் ஷூட்டிங் தொடங்கிய பின்னரே அதில் நடித்தேன் எனக் கூறியுள்ளார். இந்தப் படத்தில் கலெக்டர் ஆபிஸில் நடக்கும் பேச்சுவார்த்தையும் அப்போது ரஜினி எகிறும் காட்சியும் ரசிகர்களின் ஃபேவரைட். அதில், எஸ்பியாக கிட்டி தான் நடித்திருந்தார்.

 Rajinikanth: Actor Kitty has explained that Rajinis Baashha is a sequel to Thalapathy

இந்தக் காட்சி குறித்து பேசிய கிட்டி, தளபதி படத்தை தியேட்டரில் பார்க்கும் போது ரசிகர்கள் தன்னை திட்டித் தீர்த்துவிட்டார்கள் என்றுள்ளார். ரசிகர்கள் தன்னை திட்டியதை பார்க்கும் போது எனக்கு பெருமையாக தான் இருந்தது எனத் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய கிட்டி, பாட்ஷா படத்தில் நான் போலீஸ் கமிஷனராக நடித்தேன், அதில் ரஜினியும் கேங்ஸ்டராக நடித்திருந்தார்.

இந்தக் காட்சி தளபதி படத்தின் தொடர்ச்சியாக தான் உருவானது. தளபதியில் எஸ்பியாக நடித்த நான் கமிஷ்னர் கேரக்டரிலும், தளபதியில் ரவுடியாக மாஸ் காட்டிய ரஜினி பாட்ஷாவில் மும்பை டானாகவும் நடித்திருப்பார். அந்தக் காட்சியில் ரஜினியின் தம்பியும் இருப்பார், ஆனால் அவருக்கு நாங்கள் ஏற்கனவே அறிமுகமானவர்கள் எனத் தெரியக் கூடாது. இது எல்லாமே தளபதி படத்தை மனதில் வைத்து எழுதியது தான் என்றுள்ளார். மேலும், இந்தக் காட்சியை ரசிகர்களுடன் பார்த்தபோது அவர்கள் என்னை பாராட்டியது மறக்கவே முடியாது எனக் கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.