சென்னை: இயக்குநர் கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கத்தில் சித்தார்த் நடித்துள்ள டக்கர் படம் நாளை (ஜூன் 9) வெளியாகிறது. இந்த படத்தில் நடித்த ஹீரோயின் திவ்யான்ஷா கவுசிக் தமிழ் பிலிமி பீட்டுக்கு அளித்த பேட்டியில் ஏகப்பட்ட சுவாரஸ்ய விஷயங்களை ஷேர் செய்துள்ளார்.
ஷூட்டிங் ஸ்பாட்டில் தனக்கு நேர்ந்த அன்புத் தொல்லைகள் குறித்தும், சித்தார்த் உடன் தான் செலவிட்ட நேரத்தை பற்றியும் பேசி உள்ளார்.
தெலுங்கு படங்களில் நடித்து வந்த திவ்யான்ஷா மைக்கேல் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இந்நிலையில், சித்தார்த் உடன் டக்கர் படத்திலும் அவர் நடித்துள்ளார்.
கம்பேக் கொடுப்பாரா சித்தார்த்: நடிகர் சித்தார்த்துக்கு ரொம்ப வருஷமாவே படங்கள் ஏதும் சரியாக போகவில்லை. முன்னணி இயக்குநர்கள் படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தாலும் படங்கள் ஓடாத நிலையில், அப்படியே அவரது மார்க்கெட் சரிந்தது.
ஆனாலும், தொடர்ந்து தனக்கு பிடித்த நடிப்பு தொழிலில் முழு மூச்சாக இறங்கி எப்படியாவது கம்பேக் கொடுத்து விட வேண்டும் என போராடி வருகிறார் சித்தார்த். டக்கர் படம் கமர்ஷியல் ஹிட் கொடுக்கும் என காத்திருக்கிறார்.
டக்கர் ஹீரோயின்: நாக சைதன்யா, சமந்தா நடிப்பில் தெலுங்கில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த மஜிலி படத்தின் மூலம் தான் நடிகை திவ்யான்ஷா கவுசிக் சினிமாவில் அறிமுகமானார்.
தி ஒய்ஃப் எனும் பாலிவுட் படத்திலும், ராமாராவ் ஆன் டியூட்டி எனும் தெலுங்கு படத்திலும் நடித்த அவருக்கு தமிழில் மைக்கேல் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மைக்கேல் படத்தைத் தொடர்ந்து தற்போது டக்கர் படம் நாளை ரிலீஸ் ஆக உள்ளது.
மைனஸ் 4 டிகிரில குளிக்க வச்சாங்க: சித்தார்த்தின் டக்கர் படத்தில் இடம்பெற்ற பாடல் காட்சிக்காக சிக்கிமில் படப்பிடிப்பு செய்தோம். மைனஸ் 4 அல்லது 5 டிகிரி இருக்கும், அந்த குளிரில் குட்டி டிரெஸ் போட்டு குளிக்கும் படியான ஷாட்டை எடுத்து கொடுமைப் படுத்துனாங்க என சைக்கிள் கேப்பில் படக்குழுவினர் தனக்கு கொடுத்த அன்புத் தொல்லைகளை போட்டுக் கொடுத்து விட்டார்.
சித்தார்த்துக்கு லிப்ஸ்டிக் போட்டு விட்டேன்: சித்தார்த் உடன் நடித்த அனுபவம் பற்றி பகிர்ந்த திவ்யான்ஷா அவர் பெரிய ஸ்டார் என்பதை எல்லாம் செட்டில் காட்டிக் கொள்ளவே மாட்டார்.
அவருடன் ரொம்பவே இயல்பாக பேசி, பழகினேன். ஒரு முறை லிப்ஸ்டிக், பவுடர், போனி டெயில் எல்லாம் போட்டு பெண்ணாகவே மாற்றி அழகுப் பார்த்தேன் எனக் கூறியுள்ளார்.