இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
வித்யாசமான கூட்டணிவிஜய் லியோ படத்திற்கு பிறகு வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் தளபதி 68 படத்தில் நடிக்கவுள்ளார். இது பலருக்கும் இன்ப அதிர்ச்சியாகவே அமைந்தது. ஏனென்றால் தளபதி 68 படத்தை விஜய்யின் ஆஸ்தான இயக்குனரான அட்லீ தான் இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. இதையடுத்து தளபதி 68 படத்தின் இயக்குனர் அட்லீ இல்லை தெலுங்கு இயக்குனர் கோபிசந்த் தான் தளபதி 68 படத்தை இயக்கவுள்ளார் என செய்திகள் வந்தன. எனவே அட்லீ அல்லது கோபிசந்த் ஆகியோரில் ஒருவர் தான் தளபதி 68 படத்தை இயங்குவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் விஜய் வெங்கட் பிரபுவுடன் இணைந்தார். இது ரசிகர்கள் உட்பட திரையுலகை சார்ந்த பலருக்கும் ஆச்சர்யமான விஷயமாக இருந்தது. விஜய் – வெங்கட் பிரபு – யுவன் ஷங்கர் ராஜா என்ற புது கூட்டணியில் தளபதி 68 திரைப்படம் உருவாவது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது
துவங்குவது எப்போது ?தளபதி 68 படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி சில வாரங்கள் ஆன நிலையில் அடுத்ததாக இப்படத்தின் பூஜை ஜூன் 22 ஆம் தேதி தளபதியின் பிறந்தநாளை முன்னிட்டு போடப்படும் என தெரிகின்றது. மேலும் ஜூலை மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால் சமீபத்தில் வெங்கட் பிரபு ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது தளபதி 68 படத்தின் அறிவிப்புகள் லியோ படம் வெளியான பின்னரே தான் வரும் என கூறியிருந்தார். எனவே அக்டோபர் மாதம் லியோ படம் வெளியாக இருக்கும் நிலையில் அதன் பிறகே தான் தளபதி 68 அறிவிப்பு ஒவ்வொன்றாக வெளியாகுமாம். இந்நிலையில் ஜூலை மாதம் தளபதி 68 படப்பிடிப்பை துவங்கி அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதுகதைக்களம்பொதுவாக வெங்கட் பிரபுவின் படங்கள் என்றாலே சற்று வித்தியாசமாகத்தான் இருக்கும். சென்னை 28, மங்காத்தா, மாநாடு என இவர் இயக்கத்தில் வெளியான படங்கள் வித்யாசமான கதைக்களத்தில் வெளியாகி ரசிகர்களின் பேராதரவை பெற்றது. அதைப்போல தளபதி 68 படமும் வித்யாசமான கதைக்களத்தை கொண்ட படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் ஒரு சில பேட்டிகளில் வெங்கட் பிரபு பேசுகையில், விஜய்யை வைத்து நான் ஒரு வித்யாசமான படத்தை கொடுக்க ஆசைப்படுகின்றேன் என பலமுறை கூறியிருக்கின்றார். இதைவைத்து பார்க்கையில் தளபதி 68 திரைப்படம் வழக்கமான விஜய் படங்களில் இருந்து சற்று மாறுபட்டு இருக்கும் என்றே தெரிகின்றது. இந்நிலையில் இப்படத்தின் அறிவிப்பு வீடியோவே சற்று வித்தியாசமானதாக இருந்ததால் படம் கண்டிப்பாக புதுமையாக இருக்கும் என்பதே அனைவரது கணிப்பாக இருக்கின்றது
விஜய் – ஜோதிகாஇந்நிலையில் தளபதி 68 படத்தை பற்றிய தகவல்கள் நாளுக்கு நாள் இணையத்தில் வெளியாகி வரும் நிலையில் தற்போது வந்த ஒரு தகவல் ரசிகர்களின் எதிர்பார்ப்பை இரட்டிப்பாகியுள்ளது. அதாவது தளபதி 68 படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஜோதிகா நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. குஷி படத்தின் மூலம் முதல்முறையாக இணைந்த விஜய் மற்றும் த்ரிஷா திருமலை என்ற படத்திலும் இணைந்து நடித்திருந்தனர். இவ்விரு படங்களும் மெகாஹிட் என்பதால் கோலிவுட்டின் வெற்றிகரமான கூட்டணியாக விஜய் மற்றும் ஜோதிகா வலம் வந்தனர். இந்நிலையில் திருமலை படத்திற்கு பிறகு 20 வருடங்கள் கழித்து தளபதி 68 மூலம் இவர்கள் இணைவதாக வந்த செய்தி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. ஆனால் இத்தகவலில் எந்தளவிற்கு உண்மை இருக்கின்றது என தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது