சென்னை : நடிகர் விஜய் தற்போது லியோ படத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் பாடல் காட்சி தற்போது சூட்டிங் நடத்தப்பட்டு வருகிறது.
லியோ படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார் நடிகர் விஜய்.
லியே படத்தின் ரிலீஜ் அக்டோபர் 19ம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்தப் படத்தின் ரிலீசை தொடர்ந்தே தளபதி 68 குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் விஜய்யுடன் ஜோடி சேரும் ஜோதிகா? : நடிகர் விஜய் தற்போது லியோ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் பாடல் மற்றும் க்ளைமேக்ஸ் காட்சிகள் அடுத்தடுத்து சென்னையில் நடக்கவுள்ளது. தற்போது படத்தில் பிரம்மாண்டமான பாடல் காட்சி திட்டமிடப்பட்டு, நடத்தப்பட்டு வருகிறது. முன்னதாக இந்தப் பாடல் காட்சியின் ரிகர்சலும் பிரம்மாண்டமாகவே நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக தளபதி 68 படத்தில் நடிக்கவும் விஜய் கமிட்டாகியுள்ளார்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கவுள்ள தளபதி 68 படத்தின் சூட்டிங் குறித்த அறிவிப்பு விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கோவாவில் நடைபெற்றுவரும் இந்தப் படத்தின் டிஸ்கஷனில் இயக்குநர் வெங்கட்பிரபு உள்ளிட்டவர்கள் பங்கேற்றுள்ளனர். மேலும் விரைவில் லொகேஷனையும் இறுதி செய்வார்கள் என்று எதிர்பார்க்கலாம். இந்தப் படத்தின் ஹீரோயின் உள்ளிட்ட மற்ற அப்டேட்களை ரசிகர்களை எதிர்பார்த்தபடி உள்ளனர்.
லியோ படம் குறித்தே பேசிக் கொண்டிருந்த ரசிகர்கள், தற்போது அதிகமாக பேசிவருவது தளபதி 68 படமகுறித்து மட்டுமே. வெங்கட்பிரபு ஜாலியான கதைக்களங்களில் சிறப்பான படங்களை கொடுத்திருந்த நிலையில், தொர்ந்து சீரியசாகவே நடித்துவரும் விஜய்யை காமெடியாக ஜாலியாக பார்க்க ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்தப் படத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் ஜோடி சேரவுள்ளதாகவும் முன்னதாக தகவல்கள் வெளியாகின.
இதனிடையே தற்போது இந்தப் படத்தின் புதிய அப்டேட்டாக நடிகை ஜோதிகா, இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக இந்த ஜோடி குஷி மற்றும் திருமலை ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ள நிலையில், விரைவில் தளபதி 68 படத்தில் நடிக்க ஜோதிகாவிடம் பேச்சுவார்த்தை நடக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 20 ஆண்டுகள் கழித்து இந்த சூப்பர்ஹிட் ஜோடி மீண்டும் படத்தில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக மெர்சல் படத்தில் நடிக்க நித்யா மேனனுக்கு பதிலாக ஜோதிகாவிடம் தான் முதலில் கேட்கப்பட்டது. ஆனால் விஜய்யுடன் நடிக்கும் வாய்ப்பை அவர் அந்தப் படத்தில் நிராகரித்திருந்தார். இந்நிலையில் மீண்டும் விஜய்யுடன் நடிக்கும் வாய்ப்பை அவர் ஏற்பாரா அல்லது மெர்சல் படத்தை போலவே நிராகரித்து விடுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில் உருவாகவுள்ள தளபதி 68 படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ளார்.