அடுத்தடுத்த ரயில் விபத்துகள்.. முக்கியமான விதியை மாற்றிய ரயில்வே துறை.. வந்தது பெரிய கட்டுப்பாடு

புவனேஷ்வர்: ஒடிசா ரயில் விபத்தை தொடர்ந்து ரயில்வே விதிகளில் முக்கியமான மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன.

கொல்கத்தாவில் ஏற்பட்ட ரயில் விபத்து இந்தியாவையே உலுக்கி உள்ளது. இந்திய வரலாற்றில் ஏற்பட்ட மிக மோசமான ரயில் விபத்தாக பார்க்கப்படுகிறது. பீகார் ரயில் விபத்தில் 1981ல் 800 பேர் இறந்தனர். அதேபோல் 1956ல் அரியலூர் ரயில் விபத்தில் 250 பேர் இறந்தனர். அதற்கு இணையான விபத்து இப்போது ஒடிசாவில் ஏற்பட்டு உள்ளது.

இந்த விபத்தில் 294 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 600 பேர் வரை காயம் அடைந்து இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

விதிகள் மாற்றம்: : ஒடிசா ரயில் விபத்தை தொடர்ந்து ஒடிசாவில் அடுத்தடுத்து பல இடங்களில் ரயில்கள் தடம் புரண்டு வருகின்றன. தமிழ்நாட்டிலும் நீலகிரி ரயில் தொடங்கி வரிசையாக பல ரயில்கள் தடம் புரண்டு வருகின்றன. சென்னையிலும் இன்று காலை ரயில் தடம் புரண்ட சம்பவம் நடந்தது.

இன்று சென்னையில் ஜன் சதாப்தி ரயில் பெட்டிகள் தடம்புரண்டன,சென்ட்ரலிலிருந்து பேசின் பிரிட்ஜ் பணிமனைக்கு சென்றபோது விபத்து ஏற்பட்டது. அதில் ரயிலில் பயணிகள் இல்லாததால் பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

இதையடுத்து ரயில்வே விதிகளில் முக்கியமான மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. ரயில் இயக்கும் லோகோ பைலட்கள் பணி புரியும் போது மொபைல் போனை ஆன் செய்து வைத்திருக்க கூடாது என இந்திய ரயில்வே உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கையில் ஸ்மார்ட் வாட்ச் கட்டுவதற்கும் லோகோ பைலட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. போன், ஸ்மார்ட் வாட்சுகளை பயன்படுத்தி கவனம் சிதற கூடாது என்பதால் இந்த கட்டுப்பாடுகளை ரயில்வேத்துறை விதித்துள்ளது.

விபத்து ஏற்பட்டது எப்படி? ஒடிசா ரயில் விபத்தின் டைம் லைன் ரயில்வே துறையினர் இடையே பெரிய குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. முக்கியமாக ஒரு 20 நிமிட இடைவெளி இந்த விபத்தில் பல கேள்விகளை எழுப்பி உள்ளது. இந்த ரயில்வே விபத்து குறித்து ஆய்வு செய்து வரும் சர்வதேச ஆய்வாளர்களையும் கூட இது பெரிய அளவில் குழப்பி உள்ளது.

அது என்ன குழப்பம் என்று கேட்கிறீர்களா?.. கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வரும் பிரபல கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் பெங்களூரில் இருந்து ஹவுரா வரும் எக்ஸ்பிரஸ் விபத்துக்கு உள்ளாகி இருக்கிறது. இதில் இரண்டு ரயில்களும் நேருக்கு நேர் மோதவில்லை.

முதலில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ்தான் விபத்தில் சிக்கி உள்ளது. அதன்படி இரவு 7 மணியளவில், ஷாலிமார்-சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் ஒடிசாவில் உள்ள பாலேஸ்வர் வந்த போது அங்கே இருந்த மெயின் ரயில்வே தண்டவாளத்தில் ரயிலை கொண்டு செல்ல கிரீன் சிக்னல் கொடுத்துள்ளனர்.

ரயில் கடந்த பின் சில நொடிகளில் அதை சிவப்பாக்கி உள்ளனர். அதாவது சிக்னல் கொடுத்தவர் தவறுதலாக கொடுத்துவிட்டு மாற்றி இருக்கலாம். அல்லது வேண்டுமென்றே செய்து இருக்கலாம். அல்லது தொழில்நுட்ப கோளாறாக இருக்கலாம்.

சிவப்பாக விளக்கு மாறியதை கவனிக்காமல் கோரமண்டல் முன்னோக்கி சென்றுள்ளது. அந்த பாதையில் இருந்த சரக்கு ரயிலில் கோரமண்டல் ரயில் மோதி விபத்துக்கு உள்ளாகி இருக்கிறது. இதனால் இரவு 7 மணியளவில், ஷாலிமார்-சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது. இதன் 10-12 பெட்டிகள் ஒடிசாவில் உள்ள பாலேஸ்வர் அருகே தடம் புரண்டு, எதிர் தண்டவாளத்தில் விழுந்தன.

Do you know about this huge change in the train rules and regulations in India?

இந்த நேரத்தில்தான் 20 நிமிடம் கழித்து, பெங்களூர் யஸ்வந்த்பூரில் இருந்து ஹவுரா செல்லும் மற்றொரு ரயில் அருகில் இருந்த தடத்தில் வந்துள்ளது. அந்த தடத்தில் இருந்த தடம் புரண்ட பெட்டிகள் மீது பெங்களூர் ரயில் மோதியதால், அதன் 3-4 பெட்டிகள் தடம் புரண்டன.

இதில் முதலில் கோரமண்டல் ரயிலுக்கு பச்சை கொடுத்து பின் சிவப்பு மாற்றியதை கூட தவறு என்று சொல்லலாம்.. ஆனால் அதன்பின் ரயில் தடம் புரண்டு 20 நிமிடம் கழித்தும் கூட எதிரே வந்த பெங்களூருக்கு ரயிலுக்கு ஏன் தகவல் தரப்படவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த 20 நிமிடம்தான் இந்தியாவையே உலுக்கி உள்ளது.

அந்த 20 நிமிடம் ரயில்வே அதிகாரிகள் என்ன செய்தனர். முதல் முறை சிக்னல் தவறாக கொடுத்தது ஒரு தவறு.. ஆனால் பெங்களூர் ரயிலுக்கு தகவல் தெரிவிக்காதது இரண்டாவது தவறு. எப்படி இவர்கள் உடனே இன்னொரு தவறை செய்தனர்.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.