அதிகரித்த டெஸ்லா எலெக்ட்ரிக் கார் லாபம்! எப்படி தெரியுமா?

பெட்ரோல், டீசலில் ஓடும் வாகனங்களைத் தாண்டி, எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மக்களிடையே நல்ல வரவேற்புள்ளது. இதனால் பல கார் நிறுவனங்கள் எலெக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்து வருகின்றன.

ஆனால், எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து வரும் பல நிறுவனங்கள் சந்தையில் தத்தளித்து வரும் நிலையில், டெஸ்லா நிறுவனம் சாதுர்யமான முயற்சியால் லாபம் ஈட்டி வருகிறது. சமீபத்தில் மற்ற எலெக்ட்ரிக் கார் நிறுவனங்களுடன் போட்டியிட டெஸ்லா எலெக்ட்ரிக் காரின் விலையைக் குறைந்திருக்கிறது. அதன்மூலம் சந்தையில் தன்னுடைய லாபத்தை அதிகரித்திருக்கிறது.

டெஸ்லா

அந்த வகையில் இந்நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் கார் நிறுவனங்கள் ஒரு காரில் பெறும் நிகர லாபம் குறித்த பட்டியல்… 

  • டெஸ்லா நிறுவனம் விற்கும் ஒரு எலெக்ட்ரிக் காரின் நிகர லாபம் 7,90,616 ரூபாய் (9574 அமெரிக்க டாலர்).

  • GM நிறுவனம், ஒரு காருக்கு 1,77,545 ரூபாயும் (2150  அமெரிக்க டாலர்கள்),

  • சீனாவின் BYD நிறுவனம் 1,27,998 ரூபாயும் (1550 அமெரிக்க டாலர்கள்),

  • Toyota  98,847 ரூபாயும் (1197 அமெரிக்க டாலர்கள்),

  • volkswagen 80,349 ரூபாயும் (973 அமெரிக்க டாலர்கள்), Hyundai 76,551 ரூபாய்  (927 அமெரிக்க டாலர்கள்) என இந்நிறுவனங்கள் ஒரு காரின் விற்பனையில் லாபம் காண்கின்றன. 

இந்த கணக்கீட்டை ஒப்பிடுகையில் சந்தையில் டெஸ்லா தனக்கென தனியிடத்தை பிடித்திருக்கிறது. ஒருபுறம் சில எலெக்ட்ரிக் கார் நிறுவனங்கள் லாபம் ஈட்டிய நிலையில் சில நிறுவனங்கள் நஷ்டத்தைச் சந்தித்து வருகின்றன.

Ford நிறுவனத்தின் ஒரு எலெக்ட்ரிக் காரின் இழப்பு 62,925 ரூபாய் (762 அமெரிக்க டாலர்கள்)…

Figo & Aspire

எலெக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்யும் சீன நிறுவனமான XPeng மற்றும் NIO நிறுவனங்கள் கோவிட் தொற்று சமயத்தில் கார் விநியோகத்தில் மிகப்பெரிய சிக்கலை எதிர்கொண்டது. இதனால், இந்நிறுவனங்கள் கடுமையான இழப்பைச் சந்திக்க நேரிட்டது.

XPeng நிறுவனம் 9,69,070 ரூபாய் (11735 அமெரிக்க டாலர்கள்) மற்றும் NIO நிறுவனம் 15,80,654 ரூபாய் (19141 அமெரிக்க டாலர்கள்) என ஒரு கார் விற்பனையில் நிகர இழப்பை இந்நிறுவனங்கள் சந்தித்து வருகின்றன. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.