சேன் ஜோஸ்:
உலகில் பல அதிசயங்கள் நடக்கின்றன. அந்த வரிசையில், 16 ஆண்டுகளாக தனிமையில் வைக்கப்பட்டிருந்த பெண் முதலை ஒன்று கருவுற்று முட்டையிட்டிருப்பது பெரும் ஆச்சரியத்தையும், அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது.
இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
கோஸ்டாரிகா நாட்டில் உயிரியல் பூங்காவில் முதலைப் பண்ணை உள்ளது. இதில் பெண் முதலை ஒன்று 16 ஆண்டுகளாக தனிமையில் பராமரிக்கப்பட்டு வந்தது. மற்ற முதலைகளுடன் போடப்பட்ட போது இது மிகவும் ஆக்ரோஷம் அடைவதை கண்ட பராமரிப்பாளர்கள் இந்த முதலையை தனிமையில் விட்டனர்.
இந்நிலையில், அந்த முதலை கடந்த சில மாதங்களுக்கு சரியாக சாப்பிடாமலும், மந்தமாகவும் இருந்துள்ளது. இதையடுத்து, கால்நடை மருத்துவர்கள் அந்த முதலைக்கு வழக்கமான மருத்துவப் பரிசோதனை செய்தனர். அப்பொழுதுதான், அந்த முதலை கருவுற்றிருப்பதை அவர்கள் கண்டறிந்து ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர். ஆண் முதலையின் துணையில்லாமல் இது கருவுற்றது சாத்தியம் எனத் தெரியாமல் அவர்கள் குழம்பினர்.
மேரேஜ் ஃபோட்டோஷூட்.. ஏன் அலையுறீங்க.. நேரா மதுரை ரயில் நிலையத்துக்கு வாங்க.. சூப்பர் நியூஸ்
இந்நிலையில், இந்த முதலை சில தினங்களுக்கு முன்பு முட்டை போட்டது. இதையடுத்து, உயிரியல் விஞ்ஞானிகள் அந்த முட்டையில் உள்ள கருவை சோதனை செய்த போது 99.9% தாய் முதலையின் மரபணுவையே ஒத்திருந்தது. பொதுவாக, ஆண் மற்றும் பெண் மரபணுக்களின் கலவையாகதான் கரு இருக்கும். ஆனால், இதுவோ முழுக்க முழுக்க தாயின் மரபணுவை மட்டுமே பெற்றிருந்தது.
இது எப்படி சாத்தியம் என விஞ்ஞானிகளிடம் கேட்ட போது தான் பல உண்மைகள் தெரியவந்தது. அதாவது பறவைகள், பாம்புகள், சுறாக்கள் ஆகிய உயிரினங்களில் இதுபோல ஆண் துணையில்லாமல் கருத்தரிப்பது அரிதாக நடக்குமாம். இதனை ஆய்வாளர்கள் “கன்னி பிறப்பு” (Virgin Birth) என அழைக்கிறார்கள். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பெண் டைனோசர்கள் இதுபோன்று கருவுற்றதற்கான ஆதாரங்கள் இருக்கிறது எனக் கூறும் விஞ்ஞானிகள், ஒரு முதலையிடம் இந்த நிகழ்வு நடந்திருப்பதை முதன்முறையாக கேள்விப்படுகிறோம்” என்றனர்.