தென்காசி:
ஆபாசப் படங்களில் வருவதை போல செட்டப் செய்து தனது கள்ளக்காதலனை ஒரு பெண் கொலை செய்த சம்பவம் தென்காசியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் இலத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மாடசாமி. 24 வயதாகிறது. இவர் வேலைக்கு எதுவும் செல்லாமல் நண்பர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றி வந்துள்ளார். இதனிடையே, கடந்த அக்டோபர் மாதம் மாடசாமி திடீரென மாயமானார். அவரை அவரது உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து, அவரது பெற்றோர் தங்கள் மகனை கண்டுபிடித்து தரும்படி இலத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
போலீஸாரும் பல இடங்களில் தேடி பார்த்தும் மாடசாமியை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த சூழலில், அதே தெருவில் வசிக்கும் லட்சுமணன் என்பவரின் வீட்டில் கடந்த வாரம் பராமரிப்புப் பணி நடைபெற்றது. அப்போது வீட்டின் கழிவுநீர் கால்வாயை சுத்தப்படுவதற்காக அதை திறந்தபோது உள்ளே எலும்புக்கூடு ஒன்று கிடந்துள்ளது. இதை பார்த்து அலறிய லட்சுமணன் போலீஸில் புகார் அளிக்கவே, இதுகுறித்து விசாரணை நடைபெற்றது.
கோவையில் 3 பேர் கைது:
இதில் அந்த எலும்புக்கூடு காணாமல் போன மாடசாமிதான் என்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸார் தங்கள் விசாரணையை தீவிரப்படுத்த தொடங்கினர். இதில் மாடசாமியை கொலை செய்தததாக அதே கிராமத்தைச் சேர்ந்த பேச்சியம்மாள் (28), அவரது தாயார் மாரியம்மாள் மற்றும் 17 வயது தம்பியை போலீஸார் கோவையில் வைத்து கைது செய்தனர்.
திடுக்கிடும் தகவல்கள்:
அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்தன. ஒரு வருடத்திற்கு முன்பு பேச்சியம்மாளுடன் மாடசாமிக்கு பழக்கம் ஏற்பட்டு, பின்னர் இருவருக்கும் இடையே நெருக்கம் அதிகமானது. பேச்சியம்மாளுக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் உள்ள நிலையில், அவருடன் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளார் மாடசாமி. ஒருகட்டத்தில், மாடசாமியின் தொந்தரவு அதிகமாகவே, தன்னை விட்டு சென்றுவிடும்படி பேச்சியம்மாள் கூறியுள்ளார்.
தீர்த்துக்கட்ட முடிவு:
ஆனால், மாடசாமி தொடரந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததால், அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்திருக்கிறார் பேச்சியம்மாள். எப்போதும் ஆபாசப் படத்தை பார்த்துவிட்டு அதுபோலவே உல்லாசம் அனுபவிக்க வேண்டும் என்று சொல்வதை மாடசாமி வழக்கமாக வைத்திருக்கிறார். எனவே, அவரது ரூட்டிலேயே சென்று அவரை தீர்த்துக்கட்ட பேச்சியம்மாள் திட்டமிட்டார்.
ஆபாசப்பட பாணி:
அதன்படி, கடந்த அக்டோபர் மாதம் தனது வீட்டுக்கு மாடசாமியை பேச்சியம்மாள் வரவழைத்துள்ளார். அப்போது, தான் ஒரு ஆபாசப் படத்தை பார்த்ததாகவும் அதில் காதலனை கட்டிலில் கட்டிப்போட்டுவிட்டு பெண் உல்லாசம் அனுபவிப்பது போல இருப்பதாகவும் கூறியுள்ளார். அதுபோல செய்ய தனக்கு ஆசையாக இருப்பதாகவும் பேச்சியம்மாள் கூற, மாடசாமியும் ஜாலியாக சம்மதித்துள்ளார். இதையடுத்து, மாடசாமியை கட்டிலில் கட்டிப்போட்ட பேச்சியம்மாள், அவரது முகத்தில் தலைணையை வைத்து அழுத்தி துடிக்க துடிக்க கொலை செய்துள்ளார்.
கோவையில் தலைமறைவு:
இதனைத் தொடர்ந்து, மாடசாமியின் உடலை தனது தாயார் மாரியம்மாள் மற்றும் தம்பியின் துணையுடன் கொண்டு சென்று லட்சுமணின் வீட்டின் முன்புறம் உள்ள கழிவுநீர் தொட்டியில் போட்டுவிட்டு வந்துள்ளார் பேச்சியம்மாள். அதன் பின்னர், வீட்டை காலி செய்துவிட்டு கோவைக்கு சென்ற அவர்கள் போலீஸாரிடம் மாட்டிக்கொண்டனர்.