கொலைக் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
ஊழல் வழக்கில் கடந்த மாதம் 9ம் தேதி இம்ரான் கான் கைது செய்யப்பட்டதையடுத்து பாகிஸ்தானில் அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் குதித்தனர்.
இருப்பினும் அவருக்கு பல்வேறு வழக்குகளிலும் ஜாமீன் கிடைத்தது. இந்நிலையில் இம்ரான் கானுக்கு எதிராக தேசத்துரோக வழக்குப்பதிவு செய்ய வேண்டுமென வலியுறுத்திய வழக்கறிஞர் அண்மையில் கொலை செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக இம்ரான் கான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் 14 நாள்களுக்கு இம்ரான் கானுக்கு இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.