இயக்குனர் வெற்றிமாறனின் உதவியாளர் மரணம்: துணை நடிகர் கைது.!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக திகழ்பவர் வெற்றிமாறன். இவரிடம் பலர் உதவி இயக்குனர்களாக பணியாற்றி வருகின்றனர். அதில் சரண்ராஜ் என்பவரும் ஒருவர். இவர் நடிகர் ஒருவரின் கார் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்துள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
சரண்ராஜ் இயக்குனர் வெற்றிமாறனிடம் உதவியாளராக பணியாற்றி வருகிறார். வடசென்னை, அசுரன் உள்ளிட்ட படங்களில் சில காட்சிகளில் துணை நடிகராகவும் நடித்துள்ளார். இவர் மதுரவாயல் தனலட்சுமி தெருவை சார்ந்தவர். சரண்ராஜ் நள்ளிரவு 11.30 மணியளவில் கே.கே.நகர் ஆற்காடு சாலை அருகே இரு சக்கர வாகனத்தில் பயணித்த போது, அதி வேகமாக வந்த கார் ஒன்று அவர் பைக் மீது மோதியுள்ளது.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இதனால் ஏறபட்ட விபத்தில் சரண்ராஜ் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதுக்குறித்து அப்பகுதி மக்கள் கொடுத்த தகவலின்படி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சரண்ராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுக்குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Jailer: ‘ஜெயிலர்’ பட நடிகைக்கு ரஜினி கொடுத்த சர்ப்ரைஸ் கிப்ட்: என்னன்னு தெரியுமா..?

விசாரணையில் இந்த விபத்தை ஏற்படுத்தியவர் சாலிகிராமம் எம்.சி.அவென்யூ பகுதியை சேர்ந்த பழனியப்பன் என்பது தெரிய வந்துள்ளது. இவர் சில படங்களில் துணை நடிகராக நடித்துள்ளார். விபத்தின் போது பழனியப்பன் காரை குடி போதையில் ஓட்டி வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து பழனியப்பன் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார். இந்த சம்பவம் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2018 Movie: ரூ. 200 கோடி வசூல் பாதிப்பு.. ‘2018’ படத்திற்கு எதிராக போராட்டம்.!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.