இலங்கையில் இருந்து சிலர் கடலின் வழியாக படகின் மூலம் தங்கங்களை கடத்தி வருவதாக சுங்கத்துறை போலீசாருக்கு சில தினங்களுக்கு முன்பாக தகவல் கிடைத்துள்ளது.
அந்த தகவலின் பெயரில் கடந்த ஜூன் 5ஆம் தேதி சுங்கத்துறை போலிஸார் ஒரு குழுவாக சேர்ந்து கடலில் ரோந்து பணிக்கு செல்வது போல் சென்றுள்ளனர்.அப்போது முயல் பிடி என்ற பகுதியின் அருகே சந்தேகிக்கும் வகையிலான நபர்கள் அவர்களின் கண்களுக்கு தென்பட்டதால் அவர்கள் வந்த படகை விரட்டியவாறு போலீசார்கள் சென்றுள்ளனர்.
உச்சிப்புளி என்ற பகுதியில் நொச்சியூரணி கடற்பகுதி பாறையில் மோதி அதில் இருந்தவர்கள் கடலில் குதித்து தப்பித்து ஓடி விட்டதாக சொல்லப்படுகிறது. படகில் இருந்த தங்கக் கட்டிகளை சுங்கத்துறை போலீசார்கள் பறிமுதல் செய்தனர்.
கடத்தல் காரர்கள் தங்கக் கட்டிகளை கடலில் தூக்கி வீசியதாக சுகத்துறை போலிசாருக்கு வந்த தகவலின் பேரில் தூத்துக்குடியைச் சேர்ந்த முத்துக்குளிக்கும் மீனவர்கள் மூலம் கடலோரக் காவல்படையின் ஸ்கூபா டைவிங் வீரர்கள் ஜூன் 6, 7 ஆகிய 2 நாட்கள் நொச்சியூரணி பகுதியில் தீவிர தேடுதலில் ஈடுபட்டனர்.
ஆனால் தீவிரமாக தேடிய பின்னும் தங்க கட்டிகள் எதுவும் முத்துக்குளித்த நபர்களுக்கு கிடைக்கவில்லை. கடந்த 5-ம் தேதி நொச்சியுரானி கடற்பகுதிக்கு கடத்தி வந்த ரூ.1.54 கோடி மதிப்புடைய 2.50 கிலோ எடையுள்ள வெளிநாட்டுத் தங்கக் கட்டிகளை கணத்தி வந்தவர்களை படகுடன் சேர்த்து சுங்கத்துறை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கடத்தல்காரர்களை குறித்து தொடர்ந்து விசாரித்து வருவதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.