புதுடெல்லி
பிரபல் கிரிக்கெட் வீரர் ஷிகர் தவானும் ஆயிஷா முகர்ஜியு 2012ஆம் ஆண்டு அக்டோபர் 12ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். தவானின் எட்டு வருட திருமணம் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு விவாகரத்தில் முடிந்தது. மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த முகர்ஜி, இந்திய கிரிக்கெட் வீரரை விட 12 வயது மூத்தவர் என்பது குறிப்பிடதக்கது.
தற்போது இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவானும் அவரது மனைவி ஆயிஷா முகர்ஜியும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் இருவரும் விவாகரத்து மற்றும் அவர்களது குழந்தை தொடர்பாக இந்தியாவிலும் ஆஸ்திரேலியாவிலும் சட்ட நடவடிக்கைகளைத் மேற்கொண்டு வருகின்றனர்.குழந்தை தற்போது ஆயிஷாவுடன் ஆஸ்திரேலியாவில் உள்ளது.
டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்ற விசாரணையில் குழந்தை மீது தாய்க்கு மட்டும் தனி உரிமை இல்லை என்றும் குடும்ப நிகழ்ச்சிக்கு ஒன்பது வயது மகனை இந்தியாவுக்கு அழைத்து வர ஆயிஷா முகர்ஜிக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
பாட்டியாலா நீதிமன்ற நீதிபதி ஹரிஷ் குமார், குழந்தையை இந்தியாவுக்குக் கொண்டுவர ஆட்சேபம் தெரிவித்ததற்காக ஆயிஷா முகர்ஜியை கண்டித்தார். ஆகஸ்ட் 2020 முதல் தவானின் குடும்பத்தினர் குழந்தையைப் பார்க்கவில்லை என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
ஆகஸ்ட் 2020 முதல் குழந்தை இந்தியாவுக்கு வரவில்லை என்பதையும், தவானின் பெற்றோர் மற்றும் பிற குடும்ப உறுப்பினர்களுக்கு குழந்தையைச் சந்திக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதையும் நீதிபதி ஒப்புக்கொண்டார். எனவே, குழந்தை தனது தாத்தா பாட்டியை சந்திக்க வேண்டும் என்ற தவானின் விருப்பம் நியாயமானது என்று நீதிபதி கூறினார்.
குழந்தை இந்தியாவில் உள்ள தவானின் வீடு மற்றும் உறவினர்களுடன் பழகுவதை விரும்பாத ஆயிஷாவின் காரணங்கள் குறித்து நீதிபதி கேள்வி எழுப்பினார். குழந்தை ஷிகர் தவானுடன் இருப்பதை விரும்பும் பட்சத்தில் ஆயிஷா ஏன் அனுமதிக்க மறுக்கிறார் என்று கேள்வி எழுப்பப்பட்டது.
ஆயிஷா முகர்ஜி மெல்போர்னைச் சேர்ந்த முன்னாள் கிக்பாக்ஸர் ஆவார். தேசிய மற்றும் சர்வதேச அளவில் விளையாடி உள்ளார்.
ஷிகர் தவானுடன் ஆயிஷா முகர்ஜி பேஸ்புக் மூலம் நட்பு ஏற்பட்டது.
ஷிகர் தவானை திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு ஆயிஷா முகர்ஜி ஆஸ்திரேலிய தொழிலதிபரை முதலில் திருமணம் செய்து இருந்தார்.அவர்களுக்கு 2 குழந்தை உள்ளது.
ஆயிஷா முகர்ஜி அடிப்படையில் ஆங்கிலோ-இந்தியன், பிரிட்டிஷ் வம்சாவளியைச் சேர்ந்த இந்திய தந்தை மற்றும் தாய்க்கு பிறந்தவர். ஆயிஷாவின் குடும்பம் அவர் பிறந்த பிறகு ஆஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்தது, ஆயிஷா தற்போது மெல்போர்னில் உள்ளார்.ஆயிஷா ஆகஸ்ட் 27, 1975 இல் பிறந்தார்.அவருக்கு வயது 48