திருவனந்தபுரம்: கேரள முதல்வர் பினராயி விஜயன் நேற்று காலை அமெரிக்காவுக்கு புறப்பட்டு சென்றார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரின் உலக வர்த்தக மைய நினைவிடத்தில் முதல்வர் பினராயி விஜயன் இன்று அஞ்சலி செலுத்துகிறார். நியூயார்க்கின் டைம் சதுக்கத்தில் நாளை நடைபெறும் கேரள வம்சாவளியினரின் மாநாட்டில் அவர் பங்கேற்கிறார்.
உலக வங்கியின் தெற்காசிய பிராாந்திய துணை தலைவர் மார்ட்டினை ரைசரை ஜூன் 12-ம் தேதி வாஷிங்டனில் அவர் சந்தித்துப் பேசுகிறார். ஜூன் 13-ம் தேதி மேரிலேண்ட் கழிவு மேலாண்மை குறித்து ஆய்வு செய்கிறார்.
அமெரிக்க சுற்றுப் பயணத்தை நிறைவு செய்து ஜூன் 14-ம் தேதி கியூபா தலைநகர் ஹவானாவுக்கு முதல்வர் பினராயி விஜயன் செல்கிறார். அந்த நாட்டில் ஜூன் 15, 16-ம் தேதி நடைபெறும் பல்வேறுநிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகர டைம் சதுக்கத்தில் நடைபெறும் மாநாட்டில் முதல்வர் பினராயி விஜயன் அருகில் அமர, அருகில் நிற்க, ஒன்றாக சாப்பிட ரூ.82 லட்சம் கட்டணம் வசூலிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. அருகில் அமர ரூ.41 லட்சம், அருகில் நிற்க ரூ.20 லட்சம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.