கிரிக்கெட் வீரர் சுப்மன் கில் யாரை காதலிக்கிறார் என்ற குழப்பத்தில் அவரது ரசிகர்கள் தவித்து வருகின்றனர். இந்த திடீர் குழப்பத்துக்கு என்ன காரணம் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
இந்திய கிரிக்கெட் வீரர் சுப்மன் கில்லுக்கு இந்த ஐபிஎல் சீசன் மூலம் அதிகப்படியான ரசிகர்கள் கிடைத்துவிட்டனர். இப்போது இவர் தான் டாக் ஆஃப் தி டவுன். அதற்கு காரணம் அவரது காதல் கிசுகிசு தான். சில மாதங்களுக்கு முன்பு வரை சாரா அலி கானை இவர் காதலிப்பதாக கூறப்பட்டது.
அதன்பிறகு அவர் சாரா டெண்டுல்கரை காதலிப்பதாக கூறப்படுகிறது. இதனால் அந்த சாரா எந்த சாரா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இது ஒருபுறம் இருக்க சாரா அலிகானும் சுப்மன் கில்லும் காதலித்ததாகவும், அதன் பிறகு பிரேக் அப் செய்ததாகவும் கூட ஒரு செய்தி உலா வந்தது. அதற்கு ஏற்றார் போல சாரா அலிகான் சமீபத்தில் சுப்மன் கில்லை இன்ஸ்டாவில் அன் பாலோ செய்தார்.
இதற்கு நடுவே நடிகை சாரா அலி கானிடம் பேட்டி ஒன்றில் உங்கள் லைஃப் பாட்னர் பற்றி சொல்லுங்கள் என்று கேட்டதற்கு, கிரிக்கெட் வீரர், நடிகர், தொழில் அதிபர் என யாராக இருந்தாலும் எனது மனம் மற்றும் அறிவுக்கு ஏற்றார் போல இருக்க வேண்டும். அதுதான் முக்கியம் என நான் நினைக்கிறேன் எனக்கூறி மழுப்பினார்.
உடனே அவரிடம், தற்போது உள்ள இந்திய கிரிக்கெட் அணியில் யாராவது உங்கள் மனம் கவர்ந்துள்ளாரா என்று கேட்கப்பட்டது. அதற்கு, ‘உண்மையாகவே சொல்கிறேன். நான் எனது வாழ்க்கைத்துணையை இன்னும் பார்க்கவில்லை.’ என்று சொல்லியுள்ளார் சாரா அலி கான்.
இதனால் சாரா அலிகான் சுப்மன் கில்லை காதலிக்க வில்லை என்பது உறுதியாகியுள்ளது. அப்படி என்றால் சுப்மன் கில் சாரா டெண்டுல்கரை தான் காதலிக்கிறார். ஆனால் இதுவும் உறுதி படுத்தப்படாத தகவல் தான்.