அகமதாபாத் குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமியின் வழக்கில் மனுஸ்மிருதியை குறிப்பிட்டதால் கடும் சர்ச்சை எழுந்துள்ளது. குஜராத் உயர்நீதிமன்றத்தில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 17 வயது சிறுமி 7 மாத கர்ப்பமாக உள்ள நிலையில், கருக்கலைப்புக்கு அனுமதி கோரி சிறுமியின் தந்தை மனுத் தாக்கல் செய்திருந்தார். உயர்நீதிமன்ற நீதிபதி சமிர் தாவே, கருக்கலைப்பு தொடர்பாக முடிவு எடுக்கும் முன் சிறுமி மற்றும் அவரது வயிற்றில் வளரும் குழந்தையின் ஆரோக்கியம் குறித்து பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் […]
