தமிழகத்தில் மே மாத கோடை விடுமுறையை கொண்டாட பொதுமக்கள் தங்களது சொந்த ஊருக்கு சென்றுள்ளனர். இதற்காக தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் மற்றும் சிறப்பு ரயில்களை ஏற்பாடு செய்திருந்தது.
இந்த நிலையில் தமிழகத்தில் தற்போது மே மாத கோடை விடுமுறை முடிவடைந்த நிலையில் வரும் ஜூன் 12-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. அதன் காரணமாக பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல விரும்புவதால் பேருந்து நிலையங்களில் கூட்ட நெரிசல் ஏற்படும்.
இதனையடுத்து பொதுமக்கள் எளிதாக பயணம் செய்ய தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ளது. அந்த வகையில் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் வார இறுதி நாட்களில் சென்னைக்கு 650 பேருந்துகளும், மற்ற மாவட்டங்களுக்கு 850 பேருந்துகள் என மொத்தம் 1500 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.