சென்னை : நடிகை சாக்ஷி அகர்வால் வெள்ளை நிற டிரான்ஸ்பரன்ட் உடையில் இருக்கும் புகைப்படத்தைப் பார்த்து ரசிகர்கள் ஜொள்ளு விட்டு வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் அட்லீயின், ராஜா ராணி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர் சாக்ஷி.
திரைப்படங்களில் சைடு ரோலில் நடித்து வந்த சாக்ஷி அகர்வாலுக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் திருப்புமுனையாக அமைந்தது
நடிகை சாக்ஷி அகர்வால் : பிக் பாஸ் நிகழ்ச்சி பிறகு சிண்ட்ரெல்லா, அரண்மனை 3, நான் கடவுள் இல்லை, பகீரா உள்ளிட்ட பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து தற்போது வளர்ந்து வரும் நடிகையாக மாறி இருக்கிறார். இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் சாக்ஷி அகர்வால், தற்போது மைக்கேல் ஜாக்சன் லுக்கில் போஸ் கொடுத்துள்ளார்.
ஜூம் பண்ணாதீங்க ப்ளீஸ் : அந்த போட்டோவிற்காக வெள்ளை நிற டிரான்ஸ்பரன்ட் உடையில் போஸ் கொடுத்திருந்தார். அதைப்பார்த்த சாக்ஷியின் தீவிர பேன்ஸ், ஜூம் பண்ணி பாக்காதீங்க ப்ளீஸ் என்று நெட்டிசன்களிடம் கெஞ்சி வருகின்றனர். இந்த புகைப்படத்திற்கு இணையத்தில் லைக்குகள் குவிந்து வருகின்றன.
ஆதரவு குரல் : நடிகை சாக்ஷி அகர்வால் இணையத்தில் ஹாட்டாக போஸ் கொடுப்பது மட்டுமில்லாமல் அவ்வப்போது தனக்கு சரி என்று பட்டதற்கு குரல் கொடுத்தள்ளார். மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை கூறி மல்யுத்த வீராங்கனைகள் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆதரவு : இந்த போராட்டத்தில் வினேஷ் போகத், சாக்ஷி மாலிக், மல்யுத்த வீரர் பஞ்சரங் புனியா உள்ளிட்டோர் பங்கேற்றனர். அவர்களின் போராட்டத்திற்கு நாடு முழுவதும் பலர் ஆதரவு தெரிவித்து வந்தனர். இதற்கு நடிகர்கள் யாரும் ஆதரவு தெரிவிக்காத நிலையில் முதல் ஆளாக சாக்ஷி ஆதரவு தெரிவித்திருந்தார். அதே போல ஒடிஷாவில் நடந்த பயங்கர ரயில் விபத்துக்கும் முதல் ஆளாக இரங்கல் தெரிவித்து இருந்தார்.