தெலங்கானா,
தெலங்கானா மாநிலத்தில் ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில், அம்மாநிலத்தை சேர்ந்த அமைச்சர் கங்குல கமலாகர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் தெலங்கானா மாநிலம் அமைந்து பத்து ஆண்டுகள் ஆகி விட்ட நிலையில், மாநிலத்தின் பத்தாம் ஆண்டு கொண்டாட்டம் மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக கரீம் நகர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், அமைச்சருமான கங்குல கமலாகர் அப்பகுதியில் இருந்த ஆற்றில் படகு பயணம் மேற்கொண்டார். அப்போது எதிர்பாராத விதமாக ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில், ஆற்றில் தவறி விழுந்த அமைச்சரை, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் பத்திரமாக மீட்டனர்.
Related Tags :