திருப்பதி பக்தர்களுக்கு பஞ்ச தேவாலயம் என்ற பெயரில் ஸ்பெஷல் டூரிஸம் பேக்கெஜை வழங்கி வருகிறது ஐஆர்சிடிசி.
திருப்பதி ஏழுமலையான்ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் அமைந்துள்ள ஏழுமலையான் கோவிலுக்கு நாள் தோறும் பல்லாயிரக் கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதுமே பக்தர்கள் உள்ளனர். நாடு முழுக்க எத்தனை பெருமாள் கோவில்கள் இருந்தாலும் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்வதையே விரும்பி வருகின்றனர் பக்தர்கள்.
பால் வளத்துறை அமைச்சர் பொய் சொல்கிறார்… அண்ணாமலை கடும் கண்டனம்!பஞ்ச தேவாலயம்இதனால் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் எந்நாளும் கூட்டம் நிரம்பி வழிகிறது. விசேஷ நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் பக்தர்களின் கூட்டம் அளவுக்கு அதிகமாக இருக்கும். இந்நிலையில் திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு ஐஆர்சிடிசி டூரிஸம் பேக்கேஜ் ஒன்றை அறிவித்துள்ளது. பஞ்சதேவாலயம் என்ற பெயரில் ஸ்பெஷல் டூரிஸம் பேக்கேஜ் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள்… துணிச்சலாய் குரல் கொடுத்த சாக்ஷி அகர்வால்!ஒரே பேக்கேஜில் 5இந்த பஞ்ச தேவாலயம் ஸ்பெஷல் பேக்கேஜ் மூலம்
காணிபாக்கம், திருச்சானூர், திருமலை, ஸ்ரீகாளஹஸ்தி, ஸ்ரீனிவாச மங்காபுரம் ஆகிய ஆந்திர மாநிலத்தில் இடம்பெற்றுள்ள பிரபல கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய முடியும். இந்த 5 கோவில்களையும் ஒரே பேக்கேஜ்ஜில் வழங்குவதாக அறிவித்து பக்தர்களை திக்குமுக்காட வைத்துள்ளது ஐஆர்சிடிசி. இந்த டூரிஸம் பேக்கேஜ் ஒரு இரவு, 2 பகல்களை கொண்ட பேக்கேஜ் ஆகும்.
இரண்டாவது முறையாக உயர்த்தப்பட்ட மின் கட்டணம்.. தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம்!5 கோவில்கள்திருப்பதியில் இருந்து தினமும் இந்த டூர் பேக்கேஜ்ஜை பெறலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பஞ்ச தேவாலயம் டூர் பேக்கேஜ் திருப்பதி ரயில் நிலையம் மற்றும் திருப்பதி விமான நிலையத்தில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாள்தோறும் பல்வேறு மாநிலங்களில் இருந்து திருப்பதிக்கு வரும் பக்தர்கள் ஒரே ட்ரிப்பில் இந்த புகழ்பெற்ற 5 கோயில்களை காணும் வகையில் இப்படி ஒரு ஸ்பெஷல் ஏற்பாட்டை செய்துள்ளது ஐஆர்சிடிசி.
அப்பாடா… ஒருவழியா பருவமழை தொடங்கியிருச்சு… இனிமே சில்சில் கூல்கூல்தான்!ஐஆர்சிடிசிஇந்த பேக்கேஜை முன்பதிவு செய்த சுற்றுலாப் பயணிகளை ஐஆர்சிடிசி ஊழியர்கள் காலை 7 மணிக்கு அழைத்து செல்வார்கள். அதன் பிறகு ஹோட்டலில் செக்-இன் செய்து விட்டு, காலை உணவுக்குப் பிறகு பக்தர்கள் சீனிவாச மங்காபுரம் மற்றும் காணிபாக்கம் கோயில்களுக்கு அழைத்து செல்லப்படுவார்கள் என கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து மதிய உணவுக்குப் பிறகு ஸ்ரீகாளஹஸ்தி கோவிலுக்கு அழைத்து செல்லப்படுவார்கள்.
திருப்பதி ஏழுமலையானுக்கு திறக்கப்பட்ட 6வது கோவில்… ஜம்மு – காஷ்மீரில் பிரமாண்டம்!திருப்பதி சிறப்பு தரிசனம்பின்னர் பக்கதர்கள் திருப்பதியில் இரவு தங்க வைக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இரண்டாம் நாள் காலை திருமலைக்கு அழைத்து செல்லப்படும் பக்தர்கள் காலை 9 மணிக்கு சிறப்பு நுழைவு தரிசனம் மூலம் திருமலையில் உள்ள ஏழுமலையானை தரிசனம் செய்யலாம். அதன் பிறகு திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயார் கோவிலுக்கு பக்தர்கள் அழைத்து செல்லப்படுவார்கள்.
திருப்பதி கோவிலில் ஆதிபுருஷ் இயக்குநரிடம் முத்தம் வாங்கிய கிரித்தி சனோன்!கட்டணம்இந்த 5 ஆலயங்களிலும் வழிபட்ட பின்னர் பக்தர்கள் திருப்பதி ரயில் நிலையம் மற்றும் திருப்பதி விமான நிலையத்தில் இறக்கி விடப்படுவார்கள். இந்த ஐஆர்சிடிசி பஞ்சதேவாலயம் டூர் பேக்கேஜ் 5,170 ரூபாய் ஆகும். இதில் இரட்டை பகிர்வுக்கு 5,370 ரூபாய் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. மேலும் இந்த பேக்கேஜில் ஒரு நாள் ஹோட்டல் தங்குமிடம், ஏசி வாகனத்தில் தளம் பார்ப்பது, திருமலையில் சிறப்பு நுழைவு தரிசனம், திருச்சானூர், ஸ்ரீநிவாச மங்காபுரம், காணிபாக்கம், ஸ்ரீகாளஹஸ்தி கோவில்களில் தரிசனம், காலை உணவு, பயணக் காப்பீடு ஆகியவை அனைத்தும் அடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பலத்தை காட்ட போகிறோம்… பிராமணர்களுக்காக தனிக்கட்சி… அதிரடி காட்டும் எஸ்வி சேகர்!