வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்
கோடைகாலம் தொடங்கியதும் இந்த முறை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது எனவே நாங்கள் வார இறுதியில் கோடை வெயிலையை சமாளிக்க எதாவது அருவிக்கு பகுதிக்கு சென்று சுற்றி பார்த்துவிட்டு வரலாம் என முடிவு செய்தோம். அந்த தேடலின் முடிவில் முடிவானது திருமூர்த்தி மலை. எங்கள் ஊரில் இருந்து திருமூர்த்தி மலையானது 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, எனவே வார இறுதியான ஞாயிற்றுக்கிழமை அன்று சென்று சுற்றி பார்த்துவிட்டு திரும்பி வருவது என திட்டமிட்டோம். திட்டப்படி ஞாயிற்றுக்கிழமை அன்று அதிகாலை நேரத்தில் செல்ல வேண்டியது என்பதால் சனிக்கிழமை அன்று இரவே பயணத்துக்கு தேவையான ஏற்பாடுகளை செய்து கொண்டோம்.
பயண வழித்தடம் :- குடிமங்கலம் – உடுமலைப்பேட்டை – தளி – திருமூர்த்தி மலை
பயண திட்டம் :- பஞ்சலிங்க மலை கோவில் (5லிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டது)
திருமூர்த்தி மலை அருவி (பஞ்சலிங்க அருவி)
திருமூர்த்தி மலை கோவில் (அமணலிங்கேஸ்வரர் கோவில்)
திருமூர்த்தி மலை அணை
மேற்கண்ட பயண திட்டத்தின் படி ஞாயிற்றுக்கிழமை அன்று அதிகாலை நேரத்தில் பயணம் செய்ய வேண்டிய நிலையில் தவிர்க்க முடியாத காரணத்தால் பயண திட்டத்தில் சிறிது மாற்றம் செய்து கொஞ்சம் காலதாமதமாக கிளம்பினோம். வீட்டில் இருந்து பயணம் செய்து குடிமங்கலம் எனும் ஊர்க்கு வந்தோம்.
குடிமங்கலம் நால்ரோட்டில் உள்ள ஒரு டீ கடை ஒன்றில் டீ குடித்து விட்டு மீண்டும் பயணத்தை தொடங்கினோம், சிறிய பயண தூரத்தில் உடுமலைபேட்டை வந்திருந்தோம் காலை உணவு உன்ன வேண்டிய நேரம் என்பதால் சற்று தொலைவில் உள்ள ஊரில் சென்று உன்ன முடிவு செய்து பயணத்தை மேலும் தொடர்ந்தோம், பின் போடிபட்டி என்னும் ஊரில் காலை உணவை இட்டிலி,தோசை,பூரி என நிறைவாக சாப்பிட்டு முடித்தோம். மீண்டும் பயணத்தை தொடங்கியபோது வெயிலின் தாக்கம் சற்று அதிகம் ஆகி இருந்தது இருந்தாலும் பயணத்தை தொடர்ந்தோம் .திருமூர்த்தி மலை செல்லு முன் வாகன நுழைவு கட்டணம் செலுத்த வேண்டும் எனவே கட்டணத்தை செலுத்தி விட்டு முதலில் அணை பகுதியை கடந்து திருமூர்த்தி மலை கோவில் நுழைவு வாயிலை அடைந்தோம். அங்கு வாகனம் நிறுத்தும் இடத்தில் வாகனத்தை நிறுத்தி விட்டோம்.
திருமூர்த்தி மலை பஞ்சலிங்க மலை கோவில்
பயண திட்டபடி முதலில் மலை கோவில் செல்ல வேண்டும் என்பதாகும் எனவே சிறிது நடை பயணம் செய்து கோவிலின் கிழக்கு பகுதி உள்ள பாலத்தை கடந்து நுழைவு கட்டணம் செலுத்தும் இடத்திற்கு வந்து சேர்த்தோம். கோவில் நிர்வாகத்தால் அருவி பராமரிக்கபடுகிறது எனவே அங்கு உள்ள அலுவலகத்தில் பராமரிப்பு கட்டணம் செலுத்த வேண்டும் எனவே கட்டணத்தை செலுத்திவிட்டு மேலும் அனுமதிக்காத பொருள்கள் உள்ளதா என சோதனை செய்த பின் மேலே செல்ல அனுமதிப்பட்டோம்.
சிமெண்ட் தலம்,கல் படிக்கட்டுகள்,மண் தடம்,பாறைகள் என கடந்து 1.50 கிலோமீட்டர் நடந்து அருவியை அடைந்தோம். இந்த அருவியானது பல வடிவில் வழிந்து ஓடி அடிவாரத்தில் உள்ள கோவிலையை அடைந்த பின் அணையில் சென்று சேரும்.நடை பயணத்தின் போது சுற்றிலும் மலைகளும் வழித்து ஓடும் அருவியும் பசுமையான மரங்களும் செடி கொடிகளும் அழகாக காட்சியளித்தது.
திட்டப்படி அருவி மேல் உள்ள பஞ்சலிங்க கோவில் செல்ல வேண்டும் ஆனால் நாங்கள் சென்ற நேரம் அனுமதி கிடைக்கவில்லை ஏனெனில் குறிப்பிட்ட தினங்கள் மட்டும் தான் அருவி மேல் உள்ள பஞ்சலிங்க கோவில் செல்ல அனுமதி என்பதை தெரிந்து கொண்டோம் எனவே அடுத்த பயண திட்டப்படி அருவி குளியலுக்கு சென்றோம்.
திருமூர்த்தி மலை அருவி
மலை மேல் உள்ள கோவிலும் அருவியும் அருகில் தான் உள்ளது.அருவியில் வார விடுமுறை தினம் என்பதால் கொஞ்சம் கூட்டம் அதிகமாக இருந்தது. இருந்தாலும் மன நிறைவாக நீண்ட நேரம் அருவியில் நலைந்தும் குளித்தும் முடித்தோம்,அருவியில் இருந்த போது வெயிலின் தாக்கத்திற்கு மிக சிறப்பாக இருந்தது அருவியில் மேல் இருந்து விழும் தண்ணீரில் நனைவது அதிக உற்சாகமாக இருந்தது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நன்றக அருவியில் நலைந்து விளையாடி கொண்டு இருந்தனர்.அருவியை விட்டு பிரிய மனம் இன்றி கொண்டு வந்த துணிகளை மாற்றி கொண்டோம்,சுற்றியும் புகைப்படங்களை எடுத்து கொண்டு அருவியை விட்டு கீழே இறங்க தொடங்கினோம்.
குறிப்பு :-
* அருவிக்கு காலை 9 மணி முதல் மாலை 5 வரை அனுமதிக்கப்படுவர்.
* அருவி பராமரிப்பு கட்டணம் ரூபாய் ௫.5/- செலுத்த வேண்டும்.
* பிளாஸ்டிக் மற்றும் எளிதில் தீப்பற்றும் பொருள்கள்அருவிக்கு கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.
* குரங்குகள் அதிகம் உள்ளதால் பொருள்களை பத்திரமாக பார்த்து கொள்ளவேண்டும்.
* அருவிக்கு செல்லும் வழியில் மற்றும் அருவியின் பகுதியில் வழுக்கும் பாறைகள் உள்ளதால் கவனமாக செல்ல
வேண்டும்
* அருவியை தவிர வழியில் வேறு எங்கும் குளிக்க கூடாது.பாதுகாப்பானது அல்ல.
* பஞ்சலிங்க மலை கோவில் குறிப்பிட்ட தினங்கள் மற்றும் நேரத்தில் மட்டும் அனுமதி கிடைக்கும்
* அருவியில் தண்ணீர் ஒரே மாதிரி வருவது இல்லை காலநிலை பொறுத்து அருவியின் தண்ணீர் விழுவது மாறுபடும்.தண்ணீர் அதிகமாக வரும் போது அருவிக்கு செல்ல அனுமதி கிடைக்காது.
திருமூர்த்தி மலை கோவில் (அமணலிங்கேஸ்வரர் கோவில்)
அருவியில் இருந்து கீழ் இறங்கி வந்த பின் வந்த பின் அமணலிங்கேஸ்வரர் கோவில் சென்றோம் . இந்த கோவிலில் பாறையை குடைந்து கோவில் கருவறை அமைக்க பட்டுள்ளது.இந்த கருவறையில் தான் பிரம்மா,விஷ்ணு,சிவன் என மூன்று உற்சவ மூர்த்திகளாக அருள்பாலிக்கின்றனர். மேலும் கோவில் பகுதியில் எட்டுக்கால் மண்டபம், விநாயகர்,சுப்ரமணியசுவாமி,நவகிரக சன்னதி என சிற்பங்களும்,கோவில்களும் உள்ளன. கோவில் பிரகாரத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் வணங்கிவிட்டு கோவிலின் மண்டபத்தில் ஓய்வு எடுத்து கொண்டோம். பின்பு கோவிலில் இருந்து கிளம்பி வாகனத்தை எடுத்து கொண்டு அணை பகுதியை நோக்கி சென்றோம்.
குறிப்பு :-
*கோவில் காலை 6.30 மணி முதல் மாலை 6.30 வரை தொடர்ந்து வழிபடும் நேரம் ஆகும்
*சந்தன வழிபாடு,குறுமிளகு மற்றும் உப்பு இட்டு வழிபடுவது நடைமுறையில் உள்ளது
* அமணலிங்கேஸ்வரர் கோவில் மற்றும் அணையை சுற்றி மேலும் பல கோவில்கள் உள்ளது.
திருமூர்த்தி மலை அணை
இந்த அணையானது 60 உயரமும் 2கிலோமீட்டர் தூரமும் கொண்டது ஆகும். இந்த அணைக்கு பஞ்சலிங்க அருவியில் இருந்து வரும் தண்ணீர் மற்றும் பொள்ளாச்சி ஆழியார் அணையில் இருந்து கால்வாயை மூலம் கொண்டுவரும் தண்ணீர் என இரண்டு முக்கிய நீர் ஆதாரமாகும். இந்த அணையின் நீர் மூலம் பல ஏக்கர் விவசாய நிலங்கள் பயன் பெறுகிறது மற்றும் மக்களின் குடிநீர் தேவையும் பூர்த்தி செய்கிறது.
அணை பகுதியில் படகு சவாரி செய்யும் வசதியும், சாகச விளையாட்டு மையம், நீச்சல் குளம் மற்றும் பூங்கா என பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைய உள்ளது தேவைப்படுவோர் கட்டணம் செலுத்தி பயன்படுத்தி கொள்ளலாம். வார இறுதியில் குடும்பத்துடன் கொண்டாட சிறந்த இடம்.மீன் உணவு வகைகள் மற்றும் பல வகை உணவு கடைகளும் உள்ளன. இந்த அணை பகுதி ஒரு புகழ் பெற்ற ஷூட்டிங் ஸ்பாட் ஆகும் ஏனெனில் இந்த அணையின் அழகே முக்கிய கரணம் ஆகும்.
எண்ணற்ற பல திரை படங்கள் இங்கு படமாக்க பட்டுள்ளது. அணையின் பகுதியில் மேலும் பல கோவில்கள் உள்ளது. யோகா மையம் ஒன்று செயல் பட்டு கொண்டு உள்ளது. அனைத்தையும் பார்த்தபின் அணையின் பகுதியை தாண்டி நுழைவு பகுதிக்கு வந்தோம்.அணையை சுற்றிவர தார் சாலை வசதி உள்ளது ஆனால் அனுமதி இல்லை. எனவே நுழைவு வாயில் நின்று அணை முழுவதும் பார்த்து விட்டு புகைபடங்கள் எடுத்து கொண்டு அணையை விட்டு கிளம்பினோம்.
செல்லும் வழியில் உயரமான பாறைகள் நின்ற நிலையில் அணையின் தொடக்கத்தில் இருக்கும் அங்கு வந்து பாறைகள் மற்றும் அணையின் மறுபக்கத்தையும் பார்த்துவிட்டு வீட்டிற்கு செல்ல தயாரானோம்.
இங்கிருந்து கிளம்பியவுடன் சற்று தொலைவில் தார் சாலையை முழுவதும் மரங்கள் சூழந்த இயற்கையான ஒரு இடம் ஒன்று உள்ளது இது அனைவரும் அறிந்த பகுதியாகும் அங்கு வந்து சிறுது ஓய்வு எடுத்து கொண்டோம்.பின் தொடர் பயணத்தில் உடுமலை அடுத்த குடிமங்கலம் பகுதிக்கு வந்தோம் கடையில் டீ குடித்த பின் எங்கள் ஊரை நோக்கி ஓய்வு இல்லாமல் பயணம் செய்து மாலையில் வீடு வந்து சேர்த்தோம். இன்றைய நாள் சிறப்பாக அமைந்தது.
குறிப்பு :-
* உடுமலை தான் இதன் முக்கிய நகரம்.
* உடுமலை வந்து வாடகை வாகனத்தை அமர்த்தி கொள்ளலாம் இல்லை எனில் அரசு போக்குவரத்து
பேருந்துகள் மூலம் திருமூர்த்தி மலை பகுதிக்கு சென்று வரலாம்
* உணவு விடுதிகள் மற்றும் கடைகள் என அனைத்து வசதிகளும் இங்கு உள்ளது.
* ஒரு நாள் சுற்றுலா செல்ல சிறந்த இடம்.
* கோவில்,அருவி,அணை,மலை, பூங்கா என அனைத்தும் உள்ளது.
பயணங்கள் தொடரும் !
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!
ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.