நொடிக்கு நொடி தீவிரமடையும் பிபர்ஜாய் புயல்… கடலோர பகுதிகளில் கொட்டித் தீர்க்கும் கனமழை!

அரபிக் கடலில் உருவாகியுள்ள மிகத் தீவிர புயலான பிபர்ஜாய் புயல் நொடிக்கு நொடி தீவிரமடைந்து வருகிறது.

பிபர்ஜாய் புயல்தென்கிழக்கு அரபிக் கடலில் நேற்று முன்தினம் உருவான பிபர்ஜாய் புயல் நேற்று மிகத் தீவிர புயலாக வலுவடைந்தது. பிபர்ஜாய் புயல் தற்போது கோவாவிற்கு மேற்கே 820 கிலோ மீட்டர் தொலைவிலும், மும்பைக்கு மேற்கு-தென்மேற்கே 840 கிலோ மீட்டர் தொலைவிலும், போர்பந்தருக்கு 850 கிமீ தென்-தென்மேற்கே மற்றும் கராச்சிக்கு தெற்கே 1140 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
​ ஏமாற்றிய காதலனும்… மாங்கல்ய பாக்கியமும்.. ராமதாஸ் சொன்ன முட்டாள் கதை!​நொடிக்கு நொடி தீவிரம்பிபர்ஜாய் புயல் ஒவ்வொரு நொடியும் தீவிரமடைந்து வருகிறது. முந்தைய கணிப்புகளை மீறி, இந்த புயல் மிகவும் வலுவாகவும் ஆக்டிவாகவும் உள்ளது. பிபர்ஜாய் புயலின் தற்போதைய பாதை இந்திய கடற்கரையிலிருந்து தொலைவில் இருந்தாலும், கடலோர பகுதியில் அமைந்துள்ள பல நகரங்களில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
​ ராமருக்கு மீசை இருக்குமா? கர்ணன் போல இருக்கார்… ஆதிபுருஷை விமர்சித்த கஸ்தூரி!​பருவமழைகேரளாவில் நேற்று முதல் தென்மேற்கு பருவ மழை தொடங்கியுள்ளது. இந்நிலையில் பிபர்ஜாய் புயலால் மழை மேகங்கள் திரண்டு வருவதால் கேரளாவின் கடலோர மாவட்டங்களில் மழையின் தாக்கம் தீவிரமாக உள்ளது. இந்த பிபர்ஜாய் புயல் அடுத்த 24 மணி நேரத்தில் இன்னும் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.​ கேடி ராகவனை ஹனி ட்ராப்பில் சிக்க வைக்க ரூ. 7 லட்சம் செலவு… பகீர் கிளப்பும் எஸ்வி சேகர்!​
மீனவர்களுக்கு எச்சரிக்கைஇந்த புயலால் கர்நாடகா, மகாராஷ்டிரா, கோவா மற்றும் கேரளாவின் கடலோரப் பகுதிகளில் அதிவேக காற்று மற்றும் கடுமையான வானிலை நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்மேற்கு மாநிலங்களில் அடுத்த 5 நாட்களுக்கு மழையுடன் பலத்த காற்று வீசும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
​ திருப்பதி பக்தர்களுக்கு சூப்பர் பேக்கேஜ்… ஐஆர்சிடிசியின் அதிரடி ஸ்பெஷல் ஆஃபர்!​கடலோர மாநிலங்கள் உஷார்மிகக் கடுமையான புயலாக மாறி வரும் பிபர்ஜாய் புயலால் கோவா, மகாராஷ்டிரா மற்றும் குஜராத் போன்ற மாநிலங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உஷார் படுத்தியுள்ளன. இந்தியா மட்டுமின்றி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற பிற நாடுகளும் பிபர்ஜாய் புயலை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தேசிய அவசர நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் புயல் குறித்த ஆலோசனைக் கூட்டத்தை மேற்கொண்டுள்ளது.பால் வளத்துறை அமைச்சர் பொய் சொல்கிறார்… அண்ணாமலை கடும் கண்டனம்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.