மலையக மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பிரான்ஸ் அரசாங்கம் பங்களிப்புச் செய்ய வேண்டும்

மலையக மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும், அவர்கள் எதிர்நோக்கும் போஷனை மற்றும் தற்சார்பு பொருளாதார பிரச்சினைகளுக்கு பிரான்ஸ் அரசாங்கம் தனது பங்களிப்பை செய்ய முன்வர வேண்டும் என இலங்கைக்கான பிரான்ஸ் நாட்டு தூதுவரிடம் அமைச்சர் ஜீவன் தொண்டமான் கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கைக்கான பிரான்ஸ் நாட்டு தூதுவர் ஜோன் போன்ஷுவா பெக்டே மற்றும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஆகியோருக்கிடையிலான கலந்துரையாடல் கடந்த செவ்வாய்க்கிழமை (06.06.2023) அமைச்சில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, இந்த நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு பிரான்ஸ் அரசாங்கம் செய்து வரும் உதவிகளையும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களையும் மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர் என்ற வகையில் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ‘தாங்கள் எமது மலையக மக்களின் அபிவிருத்திக்கும் அவர்களின் வாழ்வாதார நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கும், மலையகப் பகுதிகளில் பிரான்ஸ் அரசாங்கத்தின் நிதி உதவியுடன் பால் உற்பத்தியை அதிகரிக்கவும், போஷனை அபிவிருத்தி தொடர்பாக, தாங்கள் பிரான்ஸ் தூதுவர் என்ற வகையில், தங்களின் அரசின் வழிகாட்டல்களை மேற்கொள்ள வேண்டும்.’ ஏன்றும் அமைச்சர் இச்சந்திப்பின்போது எடுத்துரைத்துள்ளார்.

மேலும் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிரான்ஸ் அரசாங்கம் எமது நாட்டின் முதலீடுகளை மேற்கொள்ள ஆவணம் செய்ய வேண்டும் என்றும் இதன்போது கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.