மேகா ஆகாஷ் திருமண செய்தி உண்மையல்ல…
வந்தா ராஜாவாகத்தான் வருவேன், என்னை நோக்கி பாயும் தோட்டா, ஒரு பக்க கதை, பேட்ட, சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும் உள்பட பல படங்களில் நடித்தவர் மேகா ஆகாஷ். தற்போது மழை பிடிக்காத மனிதன் என்ற படத்தில் நடித்து வரும் மேகா ஆகாஷ் தெலுங்கிலும் சில படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் ஒரு எம்.பி யின் மகனை மேகா ஆகாஷ் காதலித்து வருவதாகவும், அவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாகவும் சோசியல் மீடியாவில் ஒரு செய்தி வைரலாகி வருகிறது. ஆனால் இந்த செய்தி உண்மையில்லை, முற்றிலும் தவறான செய்தி என அவரது அம்மா ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.