இலங்கை முதலீட்டுச் சபையின் தலைவர் தினேஷ் வீரக்கொடி எழுதிய “ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் வாழ்க்கை வரலாறு” நூலின் மூன்றாம் பதிப்பு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் நேற்று (07) ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது.
ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் வாழ்க்கையைப் பற்றி எழுதப்பட்ட இந்நூல் முதன்முதலில் 2017 இல் வெளியிடப்பட்டது.
பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, முன்னாள் அமைச்சர் ஜோன் அமரதுங்க, ஜனாதிபதியின் விசேட திட்டப்பணிப்பாளர் தீக்ஷன அபேவர்தன உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.