லியோ படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர் டென்சில் ஸ்மித்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் லியோ. த்ரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், மிஷ்கின், மேத்தியூ தாமஸ், கவுதம் மேனன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் முக்கிய வேடத்தில் பாலிவுட் நடிகர் டென்சில் ஸ்மித் இணைந்துள்ளார்.
டென்சில் ஸ்மித் பாலிவுட் படம் மட்டுமல்ல ஹாலிவுட்டின் பிரபல இயக்குனர் கிறிஸ்டோபர் நோலின் டெனன்ட் படத்தில் நடித்துள்ளார். மேலும் டில்லி கிரைம்ஸ் போன்ற வெப் தொடரிலும் நடித்துள்ளார். லியோ படத்தில் இதுவரை நான்கு நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்டு முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்து வருகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. சென்னை ஆதித்யா ராம் ஸ்டுடியோவில் லியோ படத்தின் பாடல் காட்சி படமாக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.