தமிழகத்தில் சமீபத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் முடிவுகள் வெளியாகியது. இதில், தோல்வி அடைந்தவர்கள், வருகின்ற ஜூன் 19ஆம் தேதி துணைத்தேர்வு எழுதி, தங்களுடைய மேற்படிப்பை தொடர தமிழ் தமிழக அரசு வாய்ப்பு வழங்கியுள்ளது.
அந்த வகையில் கடந்தாண்டு 12 ஆம் வகுப்பு பொது தேர்வில் 47,934 பேர் தேர்ச்சி பெறாமல் தோல்வியடைந்துள்ளனர். இவர்களுக்கு இந்த கல்வி ஆண்டிலேயே மேற்படிப்பை தொடங்குவதற்கு ஏதுவாக வருகின்ற ஜூன் மாதம் 19ஆம் தேதி துணைத்தேர்வு நடத்த தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்த நிலையில் 12ம் வகுப்பு துணைத் தேர்வு எழுத விண்ணப்பித்த தனி தேர்வர்களுக்கு வரும் ஜூன் 14ம் தேதி www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் ஹால் டிக்கெட் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், செய்முறை தேர்வுக்கான தேதி விவரங்களை தேர்வர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையத்தின் மூலமாக தெரிந்துகொள்ளலாம். அதேபோல், துணைத் தேர்வுக்கான கால அட்டவணையும் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.