35 வருடங்களுக்குப் பிறகு வைரலான மோகன்லால் – மம்முட்டி தம்பதி
மலையாள திரையுலகில் கடந்த 40 வருடங்களாக முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் மோகன்லாலும் மம்முட்டியும். இவர்கள் இருவரும் பல திரைப்பட நிகழ்ச்சிகளிலும், தங்களுக்கு நெருங்கிய நண்பர்களின் விழாக்களிலும் அடிக்கடி ஒன்றாக கலந்து கொள்வது வழக்கம். இந்த நிலையில் சமீபத்தில் அபுதாபியில் நடைபெற்ற பிரபல தொழிலதிபர் எம்ஏ யூசுப் அலி சகோதரர் மகள் திருமணத்தில் மோகன்லாலும், மம்முட்டியும் அவர்களது மனைவியர் சகிதம் கலந்து கொண்டனர். அந்த சமயத்தில் இவர்கள் நால்வரும் இணைந்து நிற்பது போன்று பையனூர் ஜெயபிரகாஷ் என்கிற புகைப்படக் கலைஞர் எடுத்த புகைப்படம் ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.
காரணம் இதற்கு முன்னதாக இப்படி இவர்கள் நால்வரும் கிட்டத்தட்ட 35 வருடங்களுக்கு முன்பு இதேபோன்று இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர் அதன்பிறகு இப்போது தான் இவர்கள் நால்வரும் மீண்டும் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளதால் இந்த இரண்டு புகைப்படங்களும் சோசியல் மீடியாவில் தற்போது வைரலாக பரவி வருகின்றன.