Arnav :இலங்கை பெண்ணை காதலித்தது உண்மைதான்.. திவ்யா குற்றச்சாட்டிற்கு அர்னவ் பதில்!

சென்னை : சீரியல்களில் இணைந்து நடித்த அர்னவ் மற்றும் திவ்யா இருவரும் காதலித்து தங்களது மத முறைப்படி திருமணம் செய்துக் கொண்டனர்.

இருவரும் ஒன்றாக வாழ்ந்துவந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரியும் நிலை ஏற்பட்டது. அர்னவ் குறித்து போலீசில் திவ்யா ஸ்ரீதர் புகார் அளித்தார்.

இதையடுத்து அர்னவை போலீசார் கைது செய்து அவர்மீது வழக்குப்பதிவும் செய்தனர். இதையடுத்து சிறிது காலம் சிறையில் இருந்த அவர், தற்போது ஜாமீனில் வெளியில் வந்துள்ளார்.

இலங்கை பெண்ணுடனான காதல் குறித்து ஒப்புக் கொண்ட அர்னவ் : சீரியலில் இணைந்து நடித்த அர்னவ் மற்றும் திவ்யா ஸ்ரீதர் இருவரும் நீண்ட ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்துக் கொண்டனர். ஆனால் இவர்களது திருமண வாழ்க்கை நீடிக்க வில்லை. இருவருக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டு அடித்துக் கொண்ட நிலையில், கர்ப்பமாக இருக்கும் தன்னை அர்னவ், அடித்து துன்புறுத்துவதாக திவ்யா ஸ்ரீதர் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து அர்னவை காவல்துறையினர் கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர்.

இதையடுத்து அர்னவ் தற்போது ஜாமீனில் வெளியில் வந்துள்ளார். தொடர்ந்து செல்லம்மா தொடரில் அவர் நடித்து வருகிறார். இதனிடையே திவ்யாவிற்கும் குழந்தை பிறந்துள்ளது. அவர் தன்னுடைய குழந்தையை அழைத்துக் கொண்டு செவ்வந்தி சீரியல் ஸ்பாட்டிற்கு சமீபத்தில் வந்ததை பார்க்க முடிந்தது. இந்நிலையில் அவர் அனுதாபத்தை பெறும்வகையில்தான் சூட்டிங் ஸ்பாட்டிற்கு குழந்தையை எடுத்து வருவதாக விமர்சனங்கள் எழுந்தன.

இதனிடையே, இருவரும் ஒருவருக்கொருவர் மாற்றி மாற்றி குற்றம் சாட்டி வருகின்றனர். தங்களது சொந்த விஷயங்களை அம்பலப்படுத்தி வருகின்றனர். காதலிக்கும்போது இனிப்பாக தெரிந்த விஷயங்கள் எல்லாம் தற்போது குற்றச்சாட்டுகளாக பதிவு செய்யப்பட்டு வருவதாக ரசிகர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இதனிடையே சமீபத்தில் பிரபல தொலைக்காட்சிக்கு திவ்யா அளித்த பேட்டியில், அர்னவிற்கு பல பெண்களுடன் தொடர்பு உள்ளதாகவும் இலங்கையில் இருந்து அவரை பார்க்க வந்த ரசிகையை காதலித்து கர்ப்பமாக்கியதாகவும் திவ்யா, அர்னவ் மீது குற்றம் சாட்டியிருந்தார்.

இந்நிலையில் தான் செய்யாத குற்றங்களை எல்லாம் தன்மீது திவ்யா சுமத்தி வருவதாக அர்னவ் தெரிவித்துள்ளார். இந்த குற்றச்சாட்டுகளுக்கு எல்லாம் ஆதாரம் இருந்தால் நீதிமன்றத்தில் திவ்யா காட்டட்டும் என்றும் அவர் கூறியுள்ளார். இலங்கை பெண்ணை தான் காதலித்தது உண்மைதான் என்று அர்னவ் திவ்யாவின் குற்றச்சாட்டை ஏற்றுக் கொண்டுள்ளார். ஆனால் அவர் குழந்தையை கலைத்ததாக கூறப்படுவது பொய் என்றும் அர்னவ் கூறியுள்ளார்.

திவ்யா தான் செய்த தவறுகளை மறைப்பதற்காகத்தான் தன்மீது அடுக்கடுக்காக குற்றம் சாட்டி வருவதாகவும் தெரிவித்துள்ளார். திவ்யா குறித்த உண்மைகளை கோர்ட்டில் தான் ஆதாரத்துடன் சமர்ப்பிக்க உள்ளதாகவும் அர்னவ் கூறியுள்ளார். ஈஸ்வரன் சொல்லித்தான் திவ்யா இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும், குழந்தையை கருத்தில் கொண்டு, திவ்யா குறித்த உண்மைகளை தான் வெளியில் கூறாமல் இருப்பதாகவும், ஆனால் தொடர்ந்து இப்படியே இருப்பேன் என்று நினைக்க வேண்டாம் என்றும் அர்னவ் கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.