சண்டிகர்: ஹரியானா மாநிலம், குருகிராம் நகரை சேர்ந்தவர் அபிஷேக்(21), பீஹாரை பூர்விகமாக கொண்ட இவர், போஜ்பூரி பாடகர். இவர், தனது சமூக வலைதள பக்கத்தில் சிறுமியின் அந்தரங்க படங்களை பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த பெற்றோர், போலீசில் புகார் அளித்தனர்.
இதனடிப்படையில், அவரை கைது செய்த போலீசார், விசாரித்தனர். அப்போது, 2 ஆண்டுகளுக்கு ராஜிவ் நகர் பகுதியில் வசித்த போது, அதே பகுதியில் வசித்த சிறுமியை ஓட்டலுக்கு அழைத்து சென்று பலாத்காரம் செய்துள்ளார். தொடர்ந்து, அச்சிறுமியை ஆபாசமாகவும் படம்பிடித்துள்ளார். சம்பவம் குறித்து சிறுமி வெளியே சொல்லாததும் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட பாடகர் சிறையில் அடைக்கப்பட்டார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement