Dhanush: சிம்பு மட்டும் இல்ல… தனுஷுக்கும் அதே பிரச்சினை தான்… நோ சொன்ன பாலிவுட் நடிகை!

சென்னை: தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கும் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார்.

இதனைத் தொடர்ந்து இயக்குநர்கள் சேகர் கம்முலா, மாரி செல்வராஜ் ஆகியோரின் படங்களிலும் கமிட்டாகியுள்ளார்.

அதேபோல், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் D50 படத்தை இயக்கி அவரே ஹீரோவாக நடிக்கவுள்ளார்.

இந்தப் படத்தில் தனுஷ் ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

தனுஷுக்கு நோ சொன்ன பாலிவுட் நடிகை:வாத்தி படத்தைத் தொடர்ந்து தனுஷ் தற்போது கேப்டன் மில்லரில் நடித்து வருகிறார். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தென்காசி, மதுரை பகுதிகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சேகர் கம்முலா இயக்கத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் உருவாகும் படத்திற்காக கால்ஷீட் கொடுத்துள்ளார் தனுஷ்.

அதேநேரம் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் D 50 படத்தை இயக்கவும் அவர் ரெடியாகிவிட்டார். பவர் பாண்டி படத்துக்குப் பின்னர் தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் ஒரு படம் இயக்கவிருந்தார் தனுஷ். ஆனால், அது அப்படியே ட்ராப் ஆனதை அடுத்து சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் D 50 படத்தை இயக்கவுள்ளார். இதில், அவரே ஹீரோவாக நடிக்கவுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்தப் படத்தில் தனுஷ் ஜோடியாக நடிக்க கங்கனா ரனாவத்திடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாம்.

 Dhanush: Bollywood actress Kangana Ranaut refused to act in Dhanushs D 50

பாலிவுட்டில் பிஸியான நடிகையாக வலம் வரும் கங்கனா, தமிழில் தலைவி படத்தில் நடித்துள்ளார். அதேபோல் தற்போது ராகவா லாரன்ஸுடன் இணைந்து சந்திரமுகி 2 படத்திலும் நடித்து வருகிறார். ஆனால், D 50 படத்தில் தனுஷ் ஜோடியாக நடிப்பதற்கு மறுப்புத் தெரிவித்துவிட்டாராம் கங்கனா. இதன் பின்னர் தான் இப்படத்தில் த்ரிஷாவை கமிட் செய்தாராம் தனுஷ்.

முன்னதாக சிம்பு நடிக்கவுள்ள STR 48 படத்தில் நடிக்க தீபிகா படுகோனேவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் அவரும் சிம்புவுடன் நடிக்க நோ சொல்லியிருந்தார். அதன் தொடர்ச்சியாக தனுஷுக்கு ஜோடியாக நடிக்க நோ சொன்ன ரனாவத்தை கோலிவுட் ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். தனுஷ் போன்ற மாஸ் ஹீரோக்களுடன் நடிக்காமல் ராகவா லாரன்ஸ், மாதவன் போன்ற நடிகர்களுடன் நடிக்கிறார் என கலாய்த்து வருகின்றனர்.

 Dhanush: Bollywood actress Kangana Ranaut refused to act in Dhanushs D 50

இந்நிலையில், D 50 படம் வடசென்னை பின்னணியில் பிரம்மாண்டமாக உருவாகவுள்ளதாம். தனுஷ், சன் பிக்சர்ஸ், ஏஆர் ரஹ்மான், த்ரிஷா, எஸ்ஜே சூர்யா, சந்தீப் கிஷன், விஷ்ணு விஷால், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன் என பிரம்மாண்டமான கூட்டணியில் இந்தப் படம் உருவாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.