Disney+Hotstar மூலம் 2023 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளை இலவசமாக காணலாம்! ஜியோவை சமாளிக்க வேறு வழியில்லை!

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
இந்திய OTT துறையில் பல ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்திவந்த Disney+ Hotstar நிறுவனத்திற்கு சமீபத்தில் மிகபெரிய போட்டியாளராக Viacom 18 குழுமத்தின் Jiocinema மாறியுள்ளது. ரிலையன்ஸ் குழுமத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த ஜியோ சினிமா FIFA உலகக்கோப்பை, ஐபில் தொடர் போன்றவற்றின் OTT ஒளிபரப்பு உரிமையை பெற்றுள்ளது.

இதனால் Disney+ Hotstar நிறுவனத்திற்கு பெரும் இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் Disney வசம் இருந்த HBO originals தொடர்களையும் Jio cinema ஒளிபரப்பு உரிமை பெற்றுள்ளது. மிகமுக்கியமாக அனைத்து விளையாட்டு போட்டிகளையும் இலவசமாக ஸ்ட்ரீம் செய்து ரசிகர்களை குஷிபடுத்தியது. Jio cinema’வின் இந்த நடவடிக்கைகளால் இனி Disney+ Hotstar நிறுவனத்திற்கு வாடிக்கையாளர்களை தக்கவைக்க இலவசமாக ஸ்ட்ரீமிங் செய்யவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இதில் ஒரு தொடக்கமாக Disney நிறுவனம் நடைபெறவுள்ள ICC Cricket World Cup 2023 மற்றும் Asia Cup 2023 ஆகியவற்றை இலவசமாக ஒளிபரப்ப போவதாக அறிவித்துள்ளது. இதுவரை Disney+ Hotstar பொறுத்தவரை மாதம் அல்லது வருட சந்தா முறை மூலம் நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகளை பயனர்களுக்கு ஒளிபரப்பு செய்தது.

இந்திய OTT துறையில் சமீபகாலங்களாக ஏற்பட்டுள்ள மிகப்பெரிய மாற்றங்களுக்கு ஏற்றவாறு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக Disney+ Hotstar நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுதவிர பாலிவுட் நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கும் 24 மணிநேர Big Boss தொடரை இலவசமாக பார்க்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.

Jio cinema பொறுத்தவரை நடந்துமுடிந்த ஐபில் 2023 தொடர் அந்த நிறுவனத்திற்கு மிகப்பெரிய வெற்றியை தேடித்தந்துள்ளது. மேலும் இனி Jio cinema சந்தா முறைக்கு மாறவிருப்பதாக தெரிகிறது. வருடம் 999 ரூபாய் செலுத்துவதன் மூலம் நாம் அனைத்து நிகழ்ச்சிகளையும் ஜியோ சினிமாவில் காணமுடியும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.