மும்பை, புதுடில்லியில் இருந்து அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ சென்ற ‘ஏர் இந்தியா’ விமானம், இன்ஜின் கோளாறு காரணமாக ரஷ்யாவில் தரையிறக்கப்பட்டது.
இரண்டு நாள்களாக பரிதவித்த, 216 பயணியர் மற்றும் 16 விமான ஊழியர்கள், மாற்று விமானம் வாயிலாக நேற்று சான்பிரான்சிஸ்கோ சென்றடைந்தனர்.
புதுடில்லியில் இருந்து சான்பிரான்சிஸ்கோ செல்லும் ஏர் இந்தியா விமானம், கடந்த 6ம் தேதி வானில் இருந்தபோது, இன்ஜினில் திடீரென கோளாறு ஏற்பட்டது.
இதையடுத்து, அந்த விமானம் ரஷ்யாவின் மகாடன் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
இதில் பயணித்த, 216 பயணியர் மற்றும் 16 விமான ஊழியர்கள், கடந்த இரண்டு நாட்களாக போதிய வசதிகள் இன்றி பரிதவித்தனர்.
இதையடுத்து, ஏர் இந்தியா நிறுவனம் மாற்று விமானத்தை ரஷ்யாவுக்கு அனுப்பியது. அங்கு பரிதவித்த பயணியர் மற்றும் ஊழியர்கள், நேற்று காலை சான்பிரான்சிஸ்கோ சென்றடைந்தனர்.
விமான நிலையத்தில் அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்பட்டதாக ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்து உள்ளது.
இதற்கிடையே புதுடில்லி – சான்பிரான்சிஸ்கோ விமானத்தில் பயணித்த அனைத்து பயணியரின் பயணக் கட்டணத்தை திருப்பி தருவதாக, ஏர் இந்தியா நிறுவனம் நேற்று அறிவித்தது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement