Hero Passion Plus Vs Honda Shine 100 பைக்கில் சிறந்தது எது ?

ஹீரோ Passion Plus 100 Vs ஹோண்டா Shine 100 என இரண்டு பைக்குகளின் விலை, மைலேஜ் என்ஜின் மற்றும் சிறப்பம்சங்கள் ஆகியவற்றை ஒப்பீடு செய்து அறிந்து கொள்ளலாம்.  அதிக இரு பைக்குகளுமே மைலேஜ் மற்றும் பட்ஜெட் விலை என இரண்டுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு அறிமுகம் செய்யப்படுள்ளது.

100cc-110cc சந்தையில் ஹீரோ மோட்டோகார்ப் முதன்மையான நிறுவனமாக விளங்குகின்றது. குறிப்பாக ஹீரோ நிறுவனம் HF 100, HF டீலக்ஸ், ஸ்பிளெண்டர்+ , ஸ்பிளெண்டர்+ Xtech மற்றும் பேஷன்+ என 5 மாடல்களை விற்பனை செய்து வருகின்றது. தோராயமாக தமிழ்நாட்டின் ஆன்ரோடு விலை ரூ.71,000 முதல் ரூ.95,000 வரையில் இந்த 100cc பைக்குகள் கிடைக்கின்றன

Hero Passion Plus Vs Honda Shine 100

ஹோண்டா ஷைன் பைக்கிற்கு ஒரு ரசிகர் பட்டாளம் இருந்தால், ஹீரோ பேஸன் பிளஸ் பைக்கிற்கு அதைவிட கூடுதலான ரசிகர் பட்டாளம் உள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது. பழைய தோற்ற அமைப்பினை தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டுள்ள பேஷன் பிளஸ் பல்வேறு நவீனத்துமான அடிப்படை வசதிகளை கொண்டுள்ளது.

hero passion plus red color

shine 100 black with red colour

குறிப்பாக ட்யூப்லெஸ் டயர், யூஎஸ்பி சார்ஜிங் போர்ட், செமி டிஜிட்டல் கிளஸ்ட்டர், i3S நுட்பம், அகலமான இருக்கைகளை பெற்று பேஷன் பிளஸ் சிறப்பாக வந்துள்ளது. ஷைன் 100 பைக்கில் ட்யூப் டயர், அனலாக் கிளஸ்ட்டர், 17 அங்குல வீல்,அகலமான இருக்கை ஆகியவற்றை பெற்றுள்ளது.

ஷைன் 100 பைக்கில் 98.98cc ஒற்றை சிலிண்டர் ஏர் கூல்டு என்ஜின் அதிகபட்சமாக 7.28 bhp பவர் மற்றும் 8.05 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இந்த மாடலில் 4 வேக கியர்பாக்ஸ் பெற்றுள்ளது.

பேஷன் பிளஸ் 100 பைக்கில் 97.2cc என்ஜின், அதிகபட்சமாக 7.91 bhp at 8,000 rpm பவர் மற்றும் 8.05 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 4 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

Specs Hero Passion Plus Honda Shine 100
என்ஜின் 97.2cc Fi, Air-cooled 98.98cc Fi Air Cooled
பவர் 7.91 bhp at at 8,000 rpm 7.28 bhp at 7500 rpm
டார்க் 8.05NM at 6000 rpm 8.05NM at 5000 rpm
கியர்பாக்ஸ் 4 ஸ்பீடு 4 ஸ்பீடு
மைலேஜ் 70 Kmpl 70 Kmpl
அதிகபட்ச வேகம் 90 Kmph 90 Kmph

முதலில் இரு பைக்குகளின் என்ஜின் ஒப்பீடு அட்டவனையின் படி, Passion Plus மாடல் Shine 100 பைக்கை விட கூடுதலான பவர் வெளிப்படுத்துவதுடன் பல ஆண்டுகளாக மிக நம்பகமான என்ஜினாக உள்ளது.  Shine 100 பைக்கில் உள்ள புதிய என்ஜின் ஹோண்டாவின் தரத்தை உறுதிப்படுத்தும்.

இரு பைக்குகளுமே புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால் பயணர்களின் சராசரி மைலேஜ் வெளியாகவில்லை. சராசரியாக 65-70 kmpl வரை மைலேஜ் வழங்கக்கூடும்.

shine 100 first look

passion + 100 bike first look

சஸ்பென்ஷன், டயர், பிரேக் – ஒப்பீடு

இன்றைக்கு பெரும்பாலான பைக்குகளில் அடிப்படை வசதியான ட்யூப்லெஸ் டயரை ஹோண்டா வழங்கவில்லை.

Specs Hero Passion Plus Honda Shine 100
முன் சஸ்பென்ஷன் டெலிஸ்கோபிக் ஹைட்ராலிக் டெலிஸ்கோபிக் போர்க்
பின் சஸ்பென்ஷன் ஸ்விங் ஆர்ம் 5 ஸ்டெப் அடஜஸ்ட் டூயல் ரியர் ஷாக்
பிரேக்கிங் சிஸ்டம் IBS CBS
முன்பக்க பிரேக் 130 mm டிரம் 130 mm டிரம்
பின்பக்க பிரேக் 130 mm டிரம் 130 mm டிரம்
வீல் F/R 80/100-18 & 80/100-18  ட்யூப்லெஸ் 2.75-17/ 3.00-17 டியூப்

பிரேக்கிங் மற்றும் சஸ்பென்ஷன் அமைப்பில் ஒரே மாதிரியான நுட்பவிபரங்களை பெற்றதாக விளங்குகின்றது. டிரம் பிரேக்குடன் கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டத்தை இரு நிறுவனமும் வழங்குகின்றது.

passion plus

பரிமாணங்கள் ஒப்பீடு

இரண்டு பைக்குகளுமே மிக சிறப்பான பயணத்தை வழங்குவதுடன் அதிகப்படியான சுமை தாங்கும் திறனை கொண்டவை விளங்குகின்றது

Specs Hero Passion+ Honda Shine 100
எடை 115 Kg 99 Kg
இருக்கை உயரம் 790mm 786mm
கிரவுண்ட் கிளியரன்ஸ் 168mm 168mm
நீளம் 1,982mm 1,955mm
அகலம் 770mm 754mm
உயரம் 1,087mm 1,050mm
வீல் பேஸ் 1,235mm 1,245mm
சேசிஸ் டியூபுலர் டபுள் கார்டல் டைமன்ட் வகை

பேஸன் பிளஸ் 100 மாடலை விட ஷைன் 100 பைக்கின் வீல்பேஸ் 10mm வரை கூடுதலாக அமைந்திருப்பதுடன் இருக்கையின் நீளம் சற்று அதிகமாக உள்ளது. இரு பைக்குகளுமே இருவரம் மிக தாராளமாக அமர்ந்து செல்லுவதற்கு ஏற்றதாக அமைந்துள்ளது.

Honda Shine 100 Instrument Cluster e1682929754461

பைக்கின் என்ஜின், பரிமாணங்கள், மெக்கானிக்கல் சார்ந்தவற்றை ஒப்பீடு செயுது கொண்டோம். குறிப்பாக முன்பே பீரிமியம் வசதிகளால், ட்யூப்லெஸ் டயர், யூஎஸ்பி சார்ஜிங் போர்ட், செமி டிஜிட்டல் கிளஸ்ட்டர், i3S நுட்பம் ஆகியவற்றால் பேஷன் பிளஸ் பைக் விலை ரூ. 9,091 வரை கூடுதலாக உள்ளது.

Model Ex-Showroom chennai
Hero Passion+ Rs.75,691
Honda SHINE 100 Rs.66,600

ஷைன் 100 மாடலை பொறுத்தவரை, HF 100, HF டீலக்ஸ், பிளாட்டினா 100 டிவிஎஸ் ஸ்போர்ட் ஆகியவற்றை நேரடியாக விலையில் எதிர்க்கொள்ளுகின்றது. பேஸன் பிளஸ் மாடல் ஸ்பிளெண்டர் பிளஸ், டிவிஎஸ் ரைடர், ஹோண்டா CD 110, பிளாட்டினா 110 போன்ற மாடல்கள் அமைந்துள்ளன.

hero passion plus price

Hero Passion plus Vs Shine 100 On-road Price in Tamil Nadu

Model on-road chennai
Hero Passion+ Rs.90,570
Honda SHINE 100 Rs.82,564

ஹீரோ பேஷன் பிளஸ் vs ஹோண்டா ஷைன் 100 பவர் ஒப்பீடு ?

ஷைன் 100 மாடலில் 98.98cc ஒற்றை சிலிண்டர் ஏர் கூல்டு என்ஜின் அதிகபட்சமாக 7.28 bhp பவர் மற்றும் 8.05 Nm டார்க் ஆகும்.

பேஷன் பிளஸ் பைக்கில் 97.2cc என்ஜின், 7.91 bhp at 8,000 rpm பவர் மற்றும் 8.05 Nm டார்க் உள்ளது.

பேஸன் பிளஸ் அல்லது ஷைன் 100 வாங்கலாமா ?

ஹீரோ பேஸன் பிளஸ் பைக்கில் உள்ள ட்யூப்லெஸ் டயர், யூஎஸ்பி சார்ஜர், i3s நுட்பம் போன்றவை கூடுதலாக உள்ளது. ஆனால் இது போன்ற வசதிகள் ஷைன் 100 மாடலில் இல்லை விலை ரூ.9,000 வரை குறைவாக உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.